அஷ்டம சனி இதுவரை இருந்தது. இனி சனி பகவான் 9-வது வீட்டில் நல்லதை செய்வார். ஏமாற்றங்களை
வெல்வீர்கள். கடன் பிரச்னைக்கு முடிவுக்கு வரும். நிறைய வருமானம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும்.
திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
வியாபாரத்தில் ஆதாயம் கூடும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அனைவரின் பாராட்டை பெறுவீர்கள். செல்வத்தையும்,
நிம்மதியையும் தருவதாக அமையும் இந்த சனிப்பெயர்ச்சி.