7-வது வீட்டில் இருந்து கொண்டு தோல்வி, நஷ்டங்களை தந்த சனி பகவான் இனி பலம் பெறுவதால் நன்மை
உண்டாகும். அனைத்தையும் முழுமையாக முடிப்பீர்கள். தாழ்வு மனப்பான்மை விலகும். பணவரவு
அதிகரிக்கும். சேமிப்பு உண்டாகும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். குடும்பத்தில்
விட்டுக்கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகளை அதிகம் கண்டிக்க வேண்டாம். சொத்து பிரச்னைகள் வந்து
போகும்.
வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்தி கடையை விரிவுபடுத்துவீர்கள். ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு நிச்சயம். சம்பள பாக்கிகள் வரும். மொத்தத்தில்
பணப்புழக்கத்தை தருவதாக இருக்கும் இந்த சனிப்பெயர்ச்சி.