மேஷம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை
உங்கள் ராசிக்கு 10-ல் சனி பகவான், ஆகவே இதுவரை சந்தித்த பிரச்னைகளுக்கு முடிவு கிடைக்கும்.
கணவருடன் மனம்விட்டு பேசி சமாதானம் அடைவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள்.
கிடைக்க வேண்டிய பணம் வந்து சேரும். நகைகளை மீட்பீர்கள். நட்பு வளரும்.
தாய்வழி மனஸ்தாபங்கள் நீங்கும். சொத்துகள் விஷயத்தி கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் உண்டு.
போட்டியாளர்களை வெல்வீர்கள். உத்யோகத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். கவனமாகப் பழகுங்கள்.
நல்ல திறனையும், செல்வம் - செல்வாக்கையும் அள்ளித் தருவதாக அமையும் இந்த சனிப்பெயர்ச்சி காலம்.