Breaking News :

Thursday, January 28

மீனம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை

10-ம் வீட்டில் இருந்த சனி பகவான், இனி லாப வீட்டில் அமர்ந்திருப்பார். எந்த வேலையையும் மன நிறைவுடன்
முடிப்பீர்கள்.  வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நின்று போன பணிகளை முடிப்பீர்கள்.
கணவர் மனைவியை புரிந்துகொள்ளும் நேரம் இது.  அந்நியோன்யம் அதிகரிக்கும். வி.ஐ.பிக்கள்
அறிமுகமாவார்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் 5-ம் வீட்டை  பார்ப்பதால் பிள்ளைகளின்
போக்கில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. 

வியாபாரத்தில் உண்டான அவலநிலை மாறும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.   பங்குதாரர்களை
மாற்றிவிட்டுப் புதியவர்களைச் சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் பார்த்து வந்த
நிலை மாறும். சலுகைகளை கேட்டுப் பெறுவீர்கள்.  வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். புதிய தொடர்புகள்,
 வசதி வாய்ப்பை தேடித் தருவதாக அமையும் இந்த சனிப் பெயர்ச்சி.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.