12-ம் இடத்தில் இருந்த த சனி பகவான், இனி ஜென்மச் சனியாக அமர்ந்து பலன்களை தரப்போகிறார்.
செலவுகளும், பிரச்னைகளையும் சிரமமின்றி சந்திப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை
ஏற்படும். தெளிவாக முடிவெடுப்பீர்கள். நல்லவர்கள், கெட்டவர்களை அடையாளம் காண்பீர்கள். பண வரவு
உண்டு. உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. கணவர் வழியில் அலைச்சலும் செலவும் இருக்கும்.
உறவினர்களால் தொந்தரவுகள் ஏற்படலாம்.
வியாபாரத்தில் லாபம் உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். சக ஊழியர்களால்
பாராட்டப்படுவீர்கள். சங்கடங்கள், சவால்கள் நிறைந்ததாக இருக்கும் இந்த சனிப் பெயர்ச்சி.