Breaking News :

Monday, April 12

கும்பம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை 

லாப வீட்டில் இருந்த சனி பகவான், இனி 12-ம் வீட்டில் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின்
தொடக்கமாகவும் இருப்பதால் நல்லதையே செய்வார். ஓரளவு பணம் இருக்கும்.  கணவன் மனைவிக்குள் நல்ல
சூழ்நிலை ஏற்படும்.  பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் இருந்தாலும் செலவுகளும்
இருக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். செல்வாக்கு உயரும். பயணங்கள், அலைச்சல்கள் குறையும். 


வியாபாரத்தில் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வரவு உயரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள்
நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு,  வேலைப்பளு உண்டாகும்.  மற்றவர்களின் வேலையையும்
சேர்த்துப்பார்க்க வேண்டிவரும். சிலர் சதித்திட்டம் தீட்டினாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். பிரச்னைகளில்
இருந்து விடுபடுதல், அலைச்சலுடன் ஆதாயம் என்றவாறு அமையும் இந்த சனிப்பெயர்ச்சி.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.