4-ம் வீட்டில் அமர்ந்து முன்னேற்றங்களைத் தடை செய்த சனி பகவான், இனி 5-ம் வீட்டில் அமர்வதால்
தயக்கம், தடுமாற்றம் அனைத்தும் நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். அனைத்து காரியங்களையும்
வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கணவன் மனைவி இடையே குறைநிறைகளை
சுட்டிக் காட்டி மாற்றுவீர்கள். பிள்ளைகளை அவரவர் போக்கில் விட்டுவிடுவது நல்லது. கடன் வாங்கியவர்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு பணத்தைத் திருப்பித் தருவார்கள்.
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பைக் கண்டு ஆச்சர்யப்படுவார்கள். உத்யோகத்தில்
உங்களை புரிந்துகொள்வார்கள். சலுகைகள் கிடைக்கும். கௌரவம், புகழை தேடி தருவதாக அமையும் இந்த
சனிப்பெயர்ச்சி.