6-வது வீட்டில் இருந்து வசதி வாய்ப்புகளை தந்த சனி பகவான், இனி 7-வது வீட்டில் இருந்து பலன் தரப்
போகிறார். எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை.
பிள்ளைகளால் செலவுகளும் அலைச்சலும் வரலாம். சகோதர வகையில் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பணத்தை அதிகளவு செலவு செய்யாமல் சேமித்து வையுங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்
உண்டாகும். சிக்கனம் தேவை. தந்தை வழி மோதல்கள் வந்து போகும்.
புதிய முதலீடுகள் வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கோபம் வேண்டாம். உத்யோகத்தில் பணிகளை
விரைந்து முடிப்பீர்கள். ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அனைத்திலும் முதலிடம் அமைவதாக இருக்கும்
அமையும் இந்த சனிப்பெயர்ச்சி.