ஜென்ம சனியாக இருந்த சனி பகவான் இனி பாதச்சனியாக அமர்ந்து ஆளப் போகிறார். உங்கள் பேச்சுக்கு
முக்கியத்துவம் கிடைக்கும். அச்சம் விலகும். அறிவுபூர்வமாக யோசிப்பீர்கள். பிறரது சுயரூபத்தை அறிவீர்கள்.
சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் நல்உறவு நீடிக்கும். கணவருடன் வாக்குவாதங்களும்
கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். நிதானமாகப் பேசுங்கள். மௌனம் காப்பது நல்லது. காரியங்களை போராடி
முடிக்க நேரிடும். திடீர்ப் பணவரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.
நஷ்டங்களை அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். பங்குதாரர்கள் இனி பணிவாக நடந்துகொள்வார்கள்.
உத்யோகத்தில் உயர் பதவி கிடைக்கும். சக ஊழியர்கள் மனதைப் புரிந்துகொண்டு நட்பு கொள்வார்கள். வீண்
வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு, வெற்றியை தருவதாக அமையும் இந்த சனிப்பெயர்ச்சி.