சூரியன் 3-ல் அமர்வதால் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் உயரும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில்
அமைதி ஏற்படும். திருமணம் நடைபெறும். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. திடீர் பயணங்கள்
ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை குறைக்க வேண்டும். 2-ல் சுக்கிரன் நிற்பதால் பேசி சாதிப்பீர்கள். கல்யாண
பேச்சு வெற்றி பெறும்.
ஆடை, ஆபரணம் சேரும். 6-ல் செவ்வாய் இருப்பதால் வீடு, மனை விற்பது சுமுகம் ஏற்படும். வியாபாரத்தில்
போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினர் கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள்.
கோபத்தை குறைக்க வேண்டிய காலமிது!