Breaking News :

Thursday, January 28

விருச்சிகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்: 2020-2021

குருபகவான் 3ம் வீட்டில் பார்ப்பதால், அனைத்தும் சுமுகமாகும். 7, 9, 11 ஆகிய இடங்களை குரு பார்ப்பதால் பிரச்னைகள் தீரும். தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.  வாழ்க்கை துணைவழியில்  கௌரவம் கிடைக்கும்.  

9-ம் வீட்டில் குரு பார்ப்பதால்  மனஸ்தாபம் நீங்கும். தந்தைவழி ஆதாயம் கிடைக்கும். பணஉதவி கிடைக்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். குரு 11-ம் வீட்டை பார்ப்பதால்  எதிர்பாராத பணவரவு வந்துசேரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.

மற்றவர்களை நம்பி செல்ல வேண்டாம். தம்பதிகளுக்கிடையே சச்சரவுகள் நீங்கும்.  தங்க நகைகளை கவனமாக பார்க்க வேண்டும்.  உறவினர்களிடம் அதிக உரிமை கொள்ள வேண்டாம்.  யாரையும் விமர்சிக்க வேண்டாம்.  வீடு கட்டுவது, வாங்குவதில்  தாமதம் ஏற்படும்.

சஞ்சார பலன்கள்: 

உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பார்க்க இருப்பதால் தெம்பு பிறக்கும். முயற்சிகளில் சாதித்துக் காட்டுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் வெற்றிபெறும். வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்புகள் அமையும். சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். வீடு, மனை வாங்க கடனுதவி கிடைக்கும். 

திருவோணம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் பணவரவு கிடைக்கும்.  தந்தை வழி ஆதாயம் உண்டு.  ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.

குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் பார்ப்பதால் யோகம் உண்டாகும். சொத்துகள் வாங்குவீர்கள். வெற்றிகள் குவியும். சமூகத்தில் கௌரவம் கிடைக்கும்.   

சதயம் நட்சத்திரத்தில் குரு பார்க்க இருப்பதால் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நிலுவையில் இருந்த வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும். 

4-ம் வீடான கும்பத்தில் குரு  பயணிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். பயணத்தில் கவனம் தேவை.

தொழிலில்  லாபம் ஈட்டுவீர்கள்.  நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.  எதிலும் கண்டிப்பு வேண்டாம்.  புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அயல்நாட்டு  நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் ஏற்படலாம். 

உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து செயல்பட வேண்டும்.  சக ஊழியர்களும் மதிப்பார்கள்.  சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். 

பரிகாரம்:  திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியை வணங்க வேண்டும்.  

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.