3ம் இடத்தில் இருந்த குருபகவான், தற்போது 4ம் இடம் நீசமடைந்து அமர்ந்து, 8,10,12 இடங்களில் பார்க்கிறார். குரு 8-ம் இடத்தில் இருப்பதால் வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக்கான வாய்ப்பு உண்டாகும். பயணங்களால் சோர்வு ஏற்பட்டாலும் ஆதாயமும் உண்டாகும். ஆரோக்கியத்தின் முன்னேற்றம் ஏற்படும்.
குரு 10-ம் இடத்தை பார்ப்பதால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். குரு 12-ம் இடத்தை பார்ப்பதால் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆலயத் திருப்பணியில் பங்கேற்பீர்கள்.
தம்பதிகளுக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. முடிவுகள் எடுப்பதில் பாரபட்ட்சம் பார்க்க வேண்டாம். வீடு கட்ட அரசு அனுமதியில் தாமதம் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.
வீடு, மனை வாங்கும்போது சான்றிதழ்களை பார்த்து வாங்க வேண்டும். பணவரவு உண்டு. செலவுகளும் ஏற்படும். பூர்விகச் சொத்து பிரச்னைக்காக நேரத்தை வீணாக்க வேண்டாம்.
சஞ்சார பலன்கள்:
உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பார்ப்பதால் உடல் நலனில் அக்கறை வேண்டும். அலைச்சல் உண்டாகும். திடீர் செலவுகளால் ஏற்படும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வீண்பழி விலகும். மரியாதை கிடைக்கும். மகளுக்கு திருமணம் நடக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், அலைச்சல் இருக்கும். சொத்து வாங்குவீர்கள்.
சதயம் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். முயற்சிகளில் கவனம் வேண்டும். தேவை.
5ம் வீடான கும்பத்தில் குரு அமர்வதால் அதிர்ஷ்டம் உண்டாகும். கவலைகள் நீங்கும். பணம் வரவு உண்டு. திருமண யோகம் உண்டு.
முதலீடு செய்து லாபம் ஈட்ட வாய்ப்பு உண்டு. நம்பிக்கைக்குரிய பங்குதாரரை விட்டு பிரிய வாய்ப்பு உண்டு. எனவே விட்டுக்கொடுத்து போகவேண்டியது அவசியம். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேச வேண்டும். கொடுக்கல் வாங்கலில் மிக கவனம் தேவை.
பணிச்சுமை கூடும். மனச்சோர்வும் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். இடமாற்றம் வரும். சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கலாம்.
பரிகாரம்: காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீதட்சிணா மூத்தியையும் வணங்க வேண்டும்.