6-ம் வீட்டில் குரு பிரவேசிப்பதால் கவலைப்பட தேவையில்லை. குருவின் பார்வை 2, 10, 12-ல் இருப்பதால் குடும்பத்தில் கவலைகள் நீங்கும். உற்சாகம் மகிழ்ச்சி நிலைக்கும். பணப்புழக்கம் உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றிபெறும்.
குரு 10-ம் வீட்டை பார்ப்பதால் நல்ல வேலை கிடைக்கும். வேலை பணிச்சுமை கூடினாலும் உற்சாகம் பிறக்கும். பணியிடத்தில் கௌரவம் கிடைக்கும். 12-ம் இடத்தில் குருவின் பார்வை உள்ளதால் சுபச்செலவுகள் உண்டாகும். புண்ணியத் தலங்களுக்கு செல்ல வாய்ப்பு உண்டாகும்.
வீண் செலவுகள், வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சிலர் தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். எதிலும் கவனம் தேவை. வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம்.
சஞ்சார பலன்கள்:
உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பார்ப்பதால் செல்வாக்கு உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொறுப்புகள் தேடி வரும். வீடு மனை வாங்குவீர்கள்.
திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பதற்றம் அதிகரிக்கும். யாரையும் சந்தேகப்பட வேண்டாம். செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் உண்டாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் யோகம் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். பிள்ளை பாக்கியம் உண்டாகும். வழக்கு சாதகமாகும். மதிப்பு கூடும்.
சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குருபகவான் பார்ப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
7-ம் வீடான கும்பத்தில் குருபகவான் செல்வதால் யோக பலன்களை அளிப்பார். பசியின்மை, சோர்வு, முன்கோபம் நீங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். சகோதரருக்கு திருமணம் நடக்கும். பணவரவு உண்டு.
கடினமாக உழைத்துப் பணிகளை முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை முக்கியம். புதிய நிறுவனங்களின் பொருள்களை விற்பதன் லாபம் அடைவீர்கள். சிமென்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், என்டர்பிரைசஸ் பிஸினஸால் லாபம் கிடைக்கும்.
உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வேலைச்சுமை அதிகமாகும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.
பரிகாரம்: கருவூரில் உள்ள ஸ்ரீபசுபதீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூத்தியையும் வணங்கவும்.