ராசிக்கு 1.3.5 இடங்களில் குரு பார்ப்பதால் சோர்வான மனநிலை மாறும். திறமைக்கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு. பழைய மதிப்பும் மரியாதையும் திரும்ப பெறுவீர்கள். கடன் சுமை கணிசமாகக் குறையும். நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். ஆரோக்கிய குறைவுகள் நீங்கி துணிச்சல் அதிகரிக்கும்.
3-ம் இடத்தை குரு பார்ப்பதால் துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். சகோதர வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். குருபகவானின் பார்வை பூர்வ புண்ணிய மற்றும் புத்திரஸ்தானத்துக்கு வழிவகுப்பதால் பிள்ளைகள் வழியே மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு மற்றும் பொருள்சேர்க்கை ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனை செய்வீர்கள். திருமண தடைகள் நீங்கும்.
சுப நிகழ்ச்சிகளில் மரியாதை கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் வரும். குடும்ப சச்சரவுகள் தீரும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மகளின் திருமணத்தை நடத்துவீர்கள். சேமிப்பு தொடங்குவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்டெடுப்பீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
சஞ்சார பலன்கள்
குரு உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நன்மைகள் அதிகரிக்கும். வீடு, மனை கிடைக்கும். பெற்றோர்களின் உடல்நிலை கட்டுக்குள் வரும். அரசு வேலைகள் சாதகமாக இருக்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் குரு இருப்பதால் ஆடை ஆபரணங்கள் வந்துசேரும். சுபநிகழ்வுகள் நடைபெறும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். முக்கியப் பொறுப்புகள் வரும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் இருப்பதால் வாழ்க்கை துணை உறவினர்களால் வந்த மனஸ்தாபங்கள் விலகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எல்லா செயல்களில் மிகுந்த கவனம் தேவை.
குரு சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். வீடுகட்ட கடன் கிடைக்கும்.
குருபகவான் வக்ரமாகி கும்ப ராசியில் இருப்பதால் மற்றவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கவனம் தேவை. பொறுப்புகளை யாரையும் நம்பி கொடுக்க வேண்டாம். முதலீடுகளால் லாபம் கிடைக்கும். சரக்குகள் விற்றுவிடுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமூகம் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
வேலைப் பணியில் குறை கூறியவர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திறமைகள் அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை அமைய வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமைகளில் கொண்டை கடலை சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்.