Breaking News :

Monday, January 18

மிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்: 2020-2021

குரு 8ம் இடத்தில் பார்ப்பதால் அனைத்தும் சாதகமாக அமையும். ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களை குரு பார்வை உள்ளதால் பொருளாதார வசதியும், சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். சிலருக்கு  குழந்தை  பாக்கியம் உண்டாகும். 4-ம் இடத்தில் குரு  பார்வை உள்ளதால்  சேர்க்கை உண்டாகும். வீடு கட்டும்  முயற்சி வெற்றி பெறும். பிரச்னைகள் முடிவுக்கு வரும்.  12-ம் வீட்டை குரு பார்வை  பார்ப்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். சுபச் செலவுகள் மகிழ்ச்சி தரும்.  

நெருக்கடிகள் வந்து நீங்கும். எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலைச் சுமை, கனவுத் தொல்லை ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

சஞ்சார பலன்கள்:
 

குரு உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். மகனுக்கு வேலை கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் குரு இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை ஏற்பட்டு காரியத்தை  சாதிப்பீர்கள். திருமணம் கூடி வரும்.

குரு  அவிட்டம் நட்சத்திரத்தில் உள்ளதால் வீடு சொத்து பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வீட்டு மனை வாங்கும் யோகமும் உண்டு.  

சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குரு பார்ப்பதால் சோர்வடைவீர்கள். சொத்து தொடர்பான வழக்குகள் இழு பறி உண்டாகும். 

ராசிக்கு 9-ம் வீடான கும்பத்தில் குரு அமர்வதால்  யோகம் உண்டாகும். நின்றுபோன வேலைகளை முடிப்பீர்கள். உதவிகள் கிடைக்கும். வெற்றிகள் குவியும். பயணங்கள் அதிகரிக்கும். குழந்தைப் பாக்கியம், புது வேலை என அனைத்தும் சாதகமாக இருக்கும். 

வியாபாரத்தில் மிகுந்த கவனம் தேவை.  நட்டங்கள் ஏற்பட்டாலும் கவலைப்பட வேண்டாம். வாடிக்கையாளர்கள் வருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் வேண்டாம்.  இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ரசாயன வகைகளால் லாபம் நல்ல லாபம் கிடைக்கும்.

பணிபுரியும் இடத்தில் கோபம், அலட்சியம் வேண்டாம். உயரதிகாரிகள் கூறுவதை  ஏற்றுக்கொள்ளுங்கள். இடமாற்றம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரலாம். 

பரிகாரம்: தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் உள்ள ஸ்ரீஆதிநாதன், ஸ்ரீஆதிநாத நாயகியை மலர் மாலை அணிவித்து வணங்கவும்.  

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.