குரு 10ம் வீட்டில் இருப்பதால் பயம் உங்களுக்கு தேவையில்லை. குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் இருப்பதால், 2-ம் இடம் தன, குடும்ப, வாக்கு ஸ்தானம், பணப்புழக்கம் அதிகரிக்கும்.
சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சாதுர்யமாக பேசி காரியத்தை முடிப்பீர்கள். குடும்பத்தில் மனஸ்தாபங்கள் வந்துபோகும். தாயாரின் உடலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு வாங்கி கட்டுவீர்கள். கடன்களை அடைப்பீர்கள். சிறிது சேமிக்கவும் செய்வீர்கள். ராசிக்கு 10-ம் வீட்டில் குரு பார்ப்பதால், அலுவலக பணிகளில் கடினமான சூழல் ஏற்படும். வேலை பணியில் இடமாற்றம் ஏற்படலாம். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்திக் கொள்வார்கள். தன்னம்பிக்கையுடன் வாழ்வீர்கள். எதிலும் அலட்சியம் வேண்டாம்.
சஞ்சார பலன்கள்:
குரு உத்திராட நட்சத்திரத்தில் இருப்பதால் அனுகூலமான நன்மைகளே ஏற்படும். பூர்விக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வட்டிக்கு வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுப்பீர்கள்.
குரு திருவோணம் நட்சத்திரத்தில் இருப்பதால் வசதி உடன் கூடிய வீட்டுக்கு குடிசெல்வீர்கள். கவலைகள் நீங்கும். நிம்மதியான தூக்கம் ஏற்படும். வீடு கட்டும் திட்டங்களை முடுக்கி விடுவீர்கள். செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்வதால் திறமைகள் கூடும். உறவுகள் பக்க பலமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் உண்டாகும். புதிய வீட்டு, மனை வாங்குவீர்கள். குரு சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் இருப்பதால் கவலைகள் ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தம்பதிகள் விட்டு கொடுத்துப் போவது நல்லது. குரு 11ம் வீடான கும்பத்தில் வசிப்பதால் உற்சாகம் பிறக்கும். திறமைக்கேற்ப அங்கீகாரங்கள் கிடைக்கும்.
பழைய வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொண்டு, கடன் ஏதும் வாங்காமல் வியாபாரத்தை பெருக்க வேண்டாம். கடன் தருவதை நிறுத்தவும். கடையை மாற்ற நேரிடலாம். எந்தவொரு ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக கலந்தாலோசிப்பது நல்லது.
10-ம் வீட்டில் குருபகவான் இருப்பதால் பணிச்சுமை ஏற்படும். இடமாற்றமும் வரலாம். அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம்.
பரிகாரம்: ஸ்ரீமுருகப்பெருமானை, சஷ்டி திதி நாளில் தீபமேற்றி வணங்கவும்.