Breaking News :

Thursday, January 28

மீனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்: 2020-2021

குருபகவான் 11ம் வீட்டில் அமர்ந்து பலன்களை தருவதால், 3, 5, 7 ஆகிய இடங்களில் குருவின் பார்வை இருப்பதால் வீண் கவலைகள் நீங்கி தைரியம் பிறக்கும்.  திறமை பளிச்சிடும்.  சகோதரர் மூலம் அனுகூலம் உண்டாகும்.

குரு 5 ம் வீட்டில் இருப்பதால் சொத்து கைக்கு வரும். திருமணம் சாதகமாகும்.  7-ம் வீட்டை குரு பார்ப்பதால் தம்பதிகளுக்கிடையே  கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  வாழ்க்கை துணையால் ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

தடைப்பட்ட வீடு கட்டும் பணியை  தொடங்குவீர்கள். கடன் உதவி கிட்டும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  சகோதர வகையில் மனக் கசப்பு நீங்கும். வேலைக்கான முயற்சியில் பலன் கிடைக்கும். திருமணம் கூடிவரும். பதவி, பொறுப்புகள் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

சஞ்சார பலன்கள்: 

உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பார்ப்பதால் செலவுகளும், பயணங்களும் உண்டாகும். வீண் விவாதங்கள், அலட்சியம் வேண்டாம். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். 

திருவோணம் நட்சத்திரத்தில் குரு பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்; சொத்து சேர்க்கை இருக்கும். 

அவிட்டம் நட்சத்திரத்தில் குரு பார்க்க இருப்பதால் நிம்மதியுண்டு. ஓரளவுக்கு பணம் வரும். மனக்கசப்பு நீங்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். 

குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்  விடுக்கொடுத்து  போவது நல்லது. செலவுகள் அதிகரிக்கும் சமாளிப்பீர்கள். 

கும்பராசியில் குருபகவான் சஞ்சரிது  மறைவதால் அலைச்சலும், சுபச்செலவுகளும் அதிகரிக்கும். பதவிகள் தேடி வரும். 

முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புது முடிவு எடுப்பீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும்.
அதிகாரிகள் உங்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். 

பரிகாரம்: பழநியில் உள்ள தண்டாயுதபாணி  ராஜ அலங்காரத் திருக்கோலத்தை தரிசித்து வாருங்கள். நன்மை நடக்கும்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.