குரு பகவான் 5,7,9 ஆகிய இடங்களில் பார்ப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்விகச் சொத்தில் உள்ள பிரச்னைகள் சுமுகமாகும்.
குருவின் பார்வை 7-ம் வீட்டுக்கு மாறுவதால் தம்பதிகளுக்கிடையே அந்நியோன்யம் பிறக்கும். உறவுகளிடையே இருந்த பிணக்குகள் நீங்கும். வாழ்க்கை துணை வழி அந்தஸ்து உயரும்.
9-ம் இடத்தில் குரு பார்ப்பதால் பணப்புழக்கம் உண்டாகும். பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
ராசியிலேயே குரு உள்ளதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களை தலையிட வைக்காதீர்கள். அவநம்பிக்கை வந்து போகும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் தம்பதிகளுக்கிடையே பிரிவை ஏற்படுத்தும். புதிய நபர்களை நம்பக் கூடாது. காசோலை விஷயங்களில் மிக கவனம் தேவை.
சஞ்சார பலன்கள்:
உத்திராடம் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் பயணங்களும், செலவுகளும் உண்டாகும். தந்தை வழி விசேஷங்களை நடத்துவீர்கள். தொலை தூர பயணம் ஏற்படலாம். அலட்சியம் வேண்டாம்.
திருவோணம் நட்சத்திரத்தில் குரு பார்ப்பதால் செல்வாக்கு கூடும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு உடல்நிலை சீராகும். வசதியான வீட்டுக்கு இடம் மாறுவீர்கள். பிள்ளைப் பாக்கியம் உண்டாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும்.
செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு பார்க்க இருப்பதால் சகோதரர் உதவுவார். சொத்து அமையும். பெரிய பதவியில் அமர்வீர்கள்.
குரு சதய நட்சத்திரத்தில் இருப்பதால் உறவுகள் தேடி வந்து பேசுவார்கள். மனை வீடு வாங்க முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.
ராசிக்கு 2ம் வீடான கும்பத்தில் குரு செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தம்பதிகளுக்கிடையே அந்நியோன்யம் உண்டாகும். கடன்கள் தீரும். திருமணம், சீமந்தம் குடும்பத்தில் நடந்தேறும்.
வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்படலாம். புது முதலீடுகள் வேண்டாம். முன் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வேறு இடத்திற்கு கடையை மாற்ற வேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்க வேண்டும்.
வேலைச்சுமை அதிகரிக்கும் அலுவலக விவகாரங்களை வெளியே சொல்ல வேண்டாம். வேலையில் நீடிப்போமோ, இல்லையா என்ற சந்தேகம் ஏற்படும். உழைப்புக்கேற்ற நற்பெயர் கிடைக்காது. பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வைப் பெற போராட வேண்டும்.
பரிகாரம்: திருவிடைமருதூரில் உள்ள திருக்கஞ்சனூரில் ஸ்ரீஅக்னீஸ்வரரை வணங்க வேண்டும். நன்மை நடக்கும்.