Breaking News :

Monday, April 12

கும்பம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்: 2020-2021

12-ல் குரு பிரவேசித்து அங்கிருந்து 4, 6, 8ம் வீடுகளை பார்ப்பதால்  உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயாரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி கொடுக்கும்.  பணவரவுக்கும் சொத்துச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வீடு கட்டுவதில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். கடனுதவியும் கிடைக்கும்.

குரு 6-ம் வீட்டை  பார்ப்பதால்  உறவுகளுக்குள் இருந்து பிணக்குகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். மனவருத்தங்கள் நீங்கும். தவறான அபிப்பிராயங்கள் நீங்கும்.

குருபகவான் 8-ம் இடத்தை  பார்ப்பதால் ஆயுள் பலம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு சாதகமாக இருக்கும் திறமைகள் வெளிப்படும்.  பெயரும் புகழும் கிடைக்க வாய்ப்பு உண்டும்.  மனதில் தெளிவு பிறக்கும்.

அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சிறு பிரச்னைகளை  பெரிதாக்க வேண்டாம். கர்ப்பிணிகள் தூர பயணத்தை தவிர்க்கவும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, கல்யாணம் குறித்து கவலைகள் வரலாம்.  மகளுக்கு வரன் தேடும்போது விசாரித்து முடிவெடுப்பது நல்லது.  பேச்சில் கவனம் தேவை; பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம்.   

சஞ்சார பலன்கள்: 

சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு இருப்பதால் வாழ்க்கை துணையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்  செலவுகள் அதிகரிக்கும். அலட்சியம் வேண்டாம். 

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு பார்ப்பதால் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணங்களும், வேலைச்சுமையும் உண்டாகும். ஜாமீனுக்காக கையெழுத்து போட வேண்டாம்.  

அவிட்டம் நட்சத்திரத்தில் குரு இருப்பதால் சகோதர வகையில் உதவி கிடைக்கும்.  சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருகு  வேலை மாற்றம் வாய்ப்பு உண்டு. 

சதயம் நட்சத்திரத்தில் குரு பார்ப்பதால் வாயுக் கோளாறு, தலைச் சுற்றல் வந்து போகும்.  உணர்ச்சிவசப் படாதீர்கள். கவலைகள் வரும். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து போகும்.

சரக்குகளை  தள்ளுபடி விலைக்கு விற்று விடுவீர்கள்.  நண்பர்களால் ஆதாயம் உண்டு. நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். 

அலுவலகத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.  அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். 

பரிகாரம்: சென்னை - திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை வணங்கி வழிபடுங்கள்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.