5 ம் இடத்தில் குரு அமர்வதால் 1, 9, 11 ஆகிய இடங்களுக்கு குருபகவானின் பார்வை கிடைக்கிறது. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி மன நிம்மதி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 9-ம் இடத்துக்கு குருவின் பார்வை இருப்பதால் தந்தையின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குருபகவான் 11 - ம் இடத்தை பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்விகச் சொத்தின் பங்கு கிடைக்கும். தாயாருடனான மோதல்கள் நீங்கும். இடம் வாங்கும் யோகம் உண்டு. குலதெய்வ நேர்த்திக்கடனை செலுத்துவீர்கள். வீண் பயம் விலகும். நல்ல வேலை கிடைக்கும். வாங்கியிருந்த கடனை திருப்பி கொடுப்பீர்கள்.
சஞ்சார பலன்கள்:
உத்திராடம் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் சுபச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளை விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
திருவோணம் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவு உண்டு. சகோதர வகையில் உதவி கிடைக்கும். சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வங்கிக் கடன் கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். சிக்கல்கள் வந்துபோகும். உறவுகளிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை.
சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குரு செல்வதால், கர்ப்பிணிகள் பயணங்களை தவிர்க்க வேண்டும். தர்மசங்கடமான சூழ்நிலை வரும்.
6-ம் வீடான கும்பத்தில் குரு அமர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். செலவுகளைச் சமாளிக்க முடியாமல் போகும்.
இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் பிஸினஸால் லாபம் கிடைக்கும்.
மேலதிகாரி இடம் மாற்றம் பெறுவார். பெரிய பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: உத்திரமேரூரில் உள்ள திருப்புலிவனம் இடத்தில் உள்ள ஸ்ரீசிம்மகுரு தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.