7 ம் இடத்தில் குரு பகவான் உள்ளதால் யோகங்களை அள்ளி வழங்குவார். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு 1, 3, 11 ஆகிய இடங்களை பார்ப்பதால் மனக் குழப்பங்கள் நீங்கும். தெளிவாகச் சிந்திப்பீர்கள். உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகளும் வராது. சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள்.
3-ம் வீட்டை குருபார்ப்பதால் பார்ப்பதால் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். துணிச்சலாக செயல்படுவீர்கள். எதிர்ப்புகளை கடந்து செல்வீர்கள். ராசிக்கு லாபஸ்தானமான 11ம் வீட்டை குரு பார்ப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவும் உண்டு. உத்தியோகம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் சலுகைகளும் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் கைகூடும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் கூடி வரும். வி.ஐ.பிகளின் நட்பு உண்டாகும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீண் செலவுகள் குறையும். வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வாழ்க்கை துணை பக்கபலமாக இருப்பார். மகளின் திருமணத்தை நடத்துவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
சஞ்சார பலன்கள்:
குரு உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் பணவரவு உண்டாகும். பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றியும் பெறுவீர்கள். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
திருவோணம் நட்சத்திரத்தில் குரு பார்ப்பதால் புகழ் அதிகரிக்கும். வருமானம் உயரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்த பந்தங்களால் வீடு மகிழ்ச்சி பெறும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் குரு உள்ளதால் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும். பணப்புழக்கம் அதிகரிப்பால் சேமிப்பீர்கள். சொத்துப் பிரச்சனை தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
சதயம் நட்சத்திரம் 1- ம் பாதத்தில் குருபகவான் இருப்பதால் கவனம் தேவை. நம்பி ஏமாற வேண்டாம்.
ராசிக்கு 8-ம் இடமான கும்பத்தில் குரு செல்வதால் பணம் வரும். சேமிக்க முடியாது. வீண் செலவுகள், அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம்.
லாபம் அதிகரிக்கும். நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு வரும். அயல்நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஏற்றுமதி - இறக்குமதி, கட்டுமானம், பதிப்பகம், கட்டட உதிரி பாகங்கள், அரிசி மண்டி வியாபாரத்தால் லாபம் அதிகரிக்கும்.
மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: திருத்தணிக்குச் சென்று முருகனுக்குத் தீபமேற்றி வணங்கவும்.