Breaking News :

Thursday, January 28

தனுசு - குரு பெயர்ச்சிப் பலன்கள்: 2020-2021

குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். எதிரிகளால் இடையூறுகள் விலகும். கடன்களை திருப்பி கொடுக்கும் வாய்ப்பு உண்டாகும். வழக்குகளில் திருப்பம் ஏற்படலாம்.

8-ம் வீட்டுக்கு  குரு  பார்வை ஏற்படுவதால், வெளிநாடு செல்ல ஏற்பட்ட  தடைகள் நீங்கும்.  பண லாபம் உள்ளது. ற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள், உறவுகளால் நன்மை கிடைக்கும். 

குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.  பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு.  கௌரவப் பதவிகளும் கிடைக்கும்.  

சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். ஒதுங்கியிருந்த உறவினர்கள் வந்து பேசுவர். உடல் நலம் சீராகும். உற்சாகம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கை துணை  வழி மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

வேலைக்கு  நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தந்தையாருடன் மோதல்  விலகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

சஞ்சார பலன்கள்: 

உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.   

திருவோணம் நட்சத்திரத்தில் குரு  செல்வதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்கள், வீண் செலவுகளால் மன உளைச்சல் ஏற்படலாம்.   

அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வீடு மனை வாங்கும் வாய்ப்பு உண்டும். பெயர், புகழ் கௌரவம் கிடைக்கும்.  

சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அனுகூலம் உண்டு. வாழ்க்கை துணை வழி நல்ல செய்தி கிடைக்கும். 

3ம் இடமான கும்பத்தில் குருபகவான் மறைவதால் ஆடம்பர  செலவுகள் உண்டாகும்.  விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் அன்புத்தொல்லை ஏற்படும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரலாம்.  

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.    

உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலைக்கு ஏற்ப செயல்படுவீர்கள்.  சக ஊழியர்கள் மதிப்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். 

பரிகாரம்: திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியையும், ஸ்ரீதெய்வானையையும், வணங்குங்கள். 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.