ராசிக்குள் ராகு இருப்பதால் மனக்குழப்ப நிலை இருக்கும். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவும். சூழ்நிலைக்கு ஏற்ப விட்டு கொடுத்து போகவேண்டும். சூரியன் நீசமாக இருப்பதால் வீட்டில் செலவுகள் உண்டாகும். தாய் வழி உறவுகளில் செலவும்கள் வருத்தங்கள் ஏற்படும். புதன், சுக்கிரன் பலம் காரணமாக எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். தொழில் வியாபாரம் ஒழுங்காக இருக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும். முதலீடுகளில் கவனம் தேவை.
பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து வணங்க வேண்டும். ஏழைப்பெண்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி புரியலாம்.