கேது 6-ல் உள்ளதால் சாதகமான மாற்றங்கள் வரும். பிள்ளைகளுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பதால் கவலை நீங்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். புதன், சுக்கிரன் இருவரின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். செவ்வாயின் பார்வை காரணமாக அலுவலகத்தில் நெருக்கடிகள் நேரலாம். வெளியூர் பயணம் ஏற்படலாம்.
பரிகாரம்: நரசிம்மரை புதன்கிழமைகளில் தரிசிக்க வேண்டும். துப்புரவு வேலைப் பணியாளர்களுக்கு உதவலாம்.