சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு உண்டு. ஷேர் மார்க்கெட் மூலம் லாபம் வரலாம். வீடு,
மனை வாங்குவது, கட்டும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். 12-ம் ஸ்தானத்தில் சூரியன், புதனும்
மறைந்திருப்பதால் பணம் வந்தாலும் செலவுகள் இருக்கும். பணவரவு திருப்தி தரும்.
குரு 2ம் ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம்
உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பூர்விகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும்.
வியாபாரத்தில் யோகம் உண்டாகும். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம். அதிகாரிகளுடன்
முரண்பாடும் ஏற்படும். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும்.
காரியங்களை சாதிக்கும் தருணம் இது.