Breaking News :

Monday, January 18

துலாம்: மாத பலன்கள்: (2020 நவம்பர் 3 முதல் 16 வரை)

புதன் ராசிக்கு உள்ளே இருப்பதால் பாதிப்புகள் குறையும். நிம்மதி கிடைக்கும். சுக்கிரன் 12ம் ஸதானத்தில்
இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் வந்து அகலும். புதன் வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் புதனும்
யோகம் அடைந்திருப்பதால் பிரச்னைகள் வந்தாலும் வெற்றியை பெறுவீர்கள்.

ராசிக்குள் சூரியன் இருப்பதால் உடல்நலம் பாதிப்பு இருக்கும். கண், காது, மூக்கு, தொண்டை வலி
ஏற்படலாம். முன்கோபத்தைக் குறைக்க வேண்டும். குரு 3-ம் ஸ்தானத்தில் இருப்பதால் சிறு தடைகள், மன
உளைச்சல் வந்து போகும்.

வியாபாரத்தில் உழைப்பால் லாபம் கிடைக்கும். முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில்
செல்வாக்கு அதிகரிக்கும். அலுவலக தொடர்பாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வாய்ப்பு உண்டும். 

செல்வாக்கு கூடும் காலமிது.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.