சுக்கிரன் 5-ல் உள்ளதால் முயற்சிகள் வெற்றி பெறும். வருமானத்தை உயர்த்த முயற்சி செய்வீர்கள். குழந்தை
பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் உள்ள சிக்கல் நீங்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சூரியன் 6-ல்
அமர்வதால் யோகம், பணவரவு உண்டாகும். வழக்கிலும் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட
பிரச்னைகள் நீங்கும். ஆன்மீகத்தில் அக்கறை உண்டாகும். புதிய வேலை கிடைக்கும்.
செவ்வாய் 9-ம் வீட்டில் உள்ளதால் நேர்மறை எண்ணங்கள் வந்துபோகும். புதன் 6-ல் உள்ளதால் உறவினர்கள்,
நண்பர்களுடன் மோதல் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக
பரிந்து பேசுவீர்கள். கலைத்துறையினர் புகழடைவார்கள்.
அதிகாரம் பெருகும் நேரமிது!