சூரியனின் பார்வை பலமாக இருப்பதால் நின்று போன வேலைகளை முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிளுடன்
நட்பு கிடைக்கும். 2-ம் வீட்டில் சுக்கிரனும், 3ம் வீட்டில் புதனும் இருப்பதால் சாதுர்யமாக பேசி காரியத்தை
முடிப்பீர்கள்.
பக்கத்து வீட்டாருடன் மோதல் வேண்டாம். சொந்த பந்தங்கள் மதிப்பு கிடைக்கும். உறவினர், நண்பர்கள்
வீட்டு விசேஷங்களை நடத்துவீர்கள். வீடு வாங்குவது, கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். குரு 5- ல்
நிற்பதால் வராது பணம் கைக்கு வந்து சேரும். குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
வியாபாரத்தில் சரக்குகளைப் போராடி விற்பனை செய்ய நேரிடும். கமிஷன், புரோக்கரேஜ், கல்வி
நிறுவனங்களால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் வேலை அதிகரிக்கும்.
காரியம் சாதிக்கும் காலமிது.