சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் வீடு கட்ட லோன் கிடைக்கும். வெள்ளி பொருட்கள் வாங்கு
வாய்ப்பு உண்டு. தாய் வழியில் ஆதரவு கிடைக்கும். சுபச்செலவுகள் ஏற்படும்.
7ம் ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் தம்பதிகளுக்கிடையே சந்தேகம் நீங்கி அந்நியோன்யம் ஏற்படும்.
புதிய சொத்து வாங்க வாய்ப்பு உண்டு. பிரபலங்களின் உதவியுடன் காரியங்களை வெற்றிகரமாக
செய்வீர்கள். சூரியனின் ஸ்தானம் சரியில்லாததால் தூக்கமின்மை, சகோதரர் வகையில் வீண் பிரச்னைகள்
வரலாம்.
வியாபாரத்தில் புதிய திட்டங்களை வகுத்து லாபத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள்.
உத்யோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் கவனம் தேவை. எதிர்பார்த்த
இடமாற்றம் கிடைக்கலாம்.
சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் காலமிது.