உங்கள் ராசிக்கு புதன் வலுவாக இருப்பதால் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிருக்கும். பணவரவு
நிச்சயம். மகனுக்கு எதிர்பார்த்ததை போல் வேலை வாய்ப்பு அமையலாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு
அதிகரிக்கும்.
புண்ணியாதிபதி சூரியன் 7ம் ஸ்தானத்தில் இருப்பதால் பிள்ளைகளின் ஆசைகளைக் கேட்டறிந்து
நிறைவேற்றுவீர்கள்.
மகளுக்கு திருமணம் கூடி வரும் நேரம். சுக்கிரன் 6ம் ஸ்தானத்தில் மறைந்திருப்பதால் வாகனம் அடிக்கடி
பழுதாக நேரிடும். சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. குரு 9-ம் வீட்டில் இருப்பதால் வர வேண்டிய பணம்
கைக்கு வந்து சேரும்.
வியாபாரத்தில் வழக்கம் போல் லாபம் உண்டாகும். முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் சிறு
பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
எச்சரிக்கையுடன் இருக்க காலமிது.