சூரியன், புதனும் சாதகமான வீடுகளில் இருப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றி
பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகம் கிடைக்கும். திருமணம் கூடி வரும். சுப நிகழ்ச்சி நடக்கும். சுக்கிரன் லாப
வீட்டில் இருப்பதால் செயலில் வேகம் ஏற்படும். பணவரவு உண்டு.
செவ்வாய் 3-ம் வீட்டில் இருப்பதால் உற்சாகம் பிறக்கும். தள்ளி போன காரியங்கள் நடக்கும். பேச்சில் ஏற்பட்ட
தடுமாற்றம் விலகும். வியாபாரத்தில் தந்திரங்களைக் கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி உங்களை
புரிந்து கொண்டு உதவுவார். கலைத்துறையினருக்கு தடைப்பட்ட வாய்ப்பு கூடி வரும்.