Breaking News :

Thursday, January 28

கன்னி: மாத பலன்கள்: (2020 நவம்பர் 3 முதல் 16 வரை)

புதன் 2-ம் வீட்டில் யோகத்துடன் இருப்பதால் திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெறும். பூர்வீகச் சொத்தை
சீரமைப்பு செய்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். 2ம் ஸ்தானத்தில் சூரியனும் இருப்பதால் கண்
எரிச்சல், தூக்கமின்மை வந்துபோகும்.

குரு 4-ம் வீட்டில் இருப்பதால் தாயாரின் உடல்நிலை பாதிப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களிடையே
கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வாகன பயணத்தில் கவனம் தேவை. 
சுக்கிரன் ராசிக்குள் இருப்பதால் அழகு, இளமை அதிகரிக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை
வாங்கி வைப்பீர்கள்.

வியாபாரம் அதிகரிக்கும். கடையை இடமாற்றம் செய்ய வாய்ப்பு உண்டு. உத்யோகத்தில் மதிப்பு, மரியாதை
ஏற்படும். உங்களைப் பற்றி தவறான வதந்திகளை செய்வார்கள். கவலை வேண்டாம். 

அறிவால் சாதிக்கும் காலம் இது.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.