Breaking News :

Monday, January 18

தனுசு: மாத பலன்கள்: (2020 நவம்பர் 3 முதல் 16 வரை)

சூரியனும் புதனும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் மன தைரியம் பிறக்கும்.  பண வரவு உண்டு. வீண்
செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்.

10-ம் ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் புதிய வேலை கிடைக்கும். வாகன வசதி உண்டாகும். பழுதான
டி.வி, ஃப்ரிட்ஜை மாற்றும் நேரமிது. சகோதர வகையில் நன்மை பயக்கும். குரு ராசிக்குள் இருப்பதால் வீண்
அலைச்சல், மன உளைச்சல் வந்துபோகும். எந்த ஒரு முடிவுகளிலும் அவசரம் வேண்டாம். பதற்றம்
இல்லாமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

வியாபாரத்தில் வரவு கூடும். வி.ஐ.பிகளும் முக்கிய வாடிக்கையாளர்களாக மாறுவார்கள். உத்யோகத்தில்
உழைக்க வேண்டிவரும். அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை கொடுப்பார்கள். பாராட்டுகள் கிடைக்கும். 

சேமிப்பை அதிகரிக்க வேண்டிய காலமிது.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.