சுக்கிரன் ராசிக்குள் இருப்பதால் உற்சாகம் பிறக்கும். தம்பதிக்கிடையே அந்நியோன்யம் உண்டாகும். கடன்
உதவி கிடைக்கும். பெற்றோரின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். சூரியன் 2-ல்
இருப்பதால் முன்கோபம் வந்துபோகும் நிதானம் தேவை.
செவ்வாய் 5-ம் வீட்டில் இருப்பதால் மனக்குழப்பம் வந்து போகும். உடன் பிறந்தவர்களுடன் விவாதம் வரும்.
வியாபாரத்தில் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் கை ஓங்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
தலை நிமிர்ந்து இருக்கும் நேரமிது!