தியானம் எப்போது செய்ய வேண்டும் ?

By News Room

அதிகாலை Best. மாலை 6 மணிக்கு.

பொதுவாக எல்லோரும் சொல்வது.

ஆனால் தியானம் என்பது வாழ்வோடு இணைத்து விட வேண்டும்.

விழிப்புணர்வு என்று ஓஷோ சொல்வார்.

எந்த செயல் செய்தாலும் விழிப்புணர்வோடு, செய்யும் காரியமே கண்ணாக, உயிர் மூச்சாக, முழு கவனத்தோடு செய்தீர்களேயானால் அதுவும் தியானம்தான்.

மன அலையை Mental frequencyயை 
குறைக்கும் எந்த மனப்பயிற்சியும்,செயலும் 
கூட தியானத்தின் Categoryதான்

One thing at one will என்பார் அருட்தந்தை.

காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே... 
இதுவும் தியானத்தின் Core pointதான்.

காலை சிறிது நேரம் மாலை சிறிது நேரம் தியானம் செய்வதால்,அதில் கிடைத்த மன அமைதியை ,நாள் முழுவதும் கொண்டு செல்ல உதவுவது, செய்யும் செயலில் involvement, பின் செயல்களே தியானமாக மாறிவிடும்.

எப்படி நாள் முழுவதும் சுவாசம் தேவையோ, அது போல தியானத்தையே வாழ்க்கையாக முறைபடுத்தி கொண்டவர்கள் பாக்கியவான்கள்.

எப்படி?

கார் அல்லது Two wheeler ஓட்டுகிறோம். 
முழு கவனமும் அங்கே.

தொழிலில் அல்லது அலுவலகத்தில் 
மனதை சிதறவிடாமல் முழு கவனமும்அங்கே.

பெண்கள் சமையல். முழு கவனமும் அங்கே.

குளிக்கிறோம்... முழு கவனம் அங்கே.

உணவு உண்கிறோம். சுவைத்து முழு கவனமும் அங்கே.

பேசும் போது சொற்களில் முழு கவனம்.

ஒரு செயலில் கவனத்தை ஒருமுகப்படுத்தினாலே, தியானம் என்ற பூஞ்சோலைக்குள் நுழைந்து விட்டோம்.

தியானம் என்பது பெரிய கம்பசூத்திரம்அல்ல.

அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தினாலே தியானம்தான். Simple.

இந்த விழிப்புணர்வோடு இன்று முதல் உங்கள் செயல்களை மாற்றுங்கள். நாள் முழுவதும் தியானமேதான், புத்துணர்ச்சி, வாழ்க்கையே மாறிவிடும்.

ஸ்ரீரமண மகரிஷி சொல்வார்....

தற்கவனம் அவசியம்.

கண்கள் மூடியிருப்பதோ அல்லது திறந்திருப்பதோ முக்கியமன்று.

கவனிப்பவனை கவனித்தாலே போதும் "

கண்களை திறப்பதும் மூடுவதும் 
உங்கள் விருப்பம்."

இன்று முதல் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வதோடு, அதில் கிடைத்த மன அமைதியை முதலீடு செய்து, 

நாள் முழுவதும் விழிப்புணர்வோடு, செய்யும் செயல்களையும் தியானமாக, விழிப்புணர்வாக மாற்றி  தியானிப்போம்.

.
மேலும்