குறள் பால்: காமத்துப்பால். குறள் 1111:

By News Room

குறள் பால்: காமத்துப்பால்.  குறள் இயல்: களவியல்.  அதிகாரம்: 112.
நலம்புனைந்துரைத்தல்.

குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

எம் எஸ் கே மனோகரன் சாமி விளக்கம்:-
நலம்+புனைந்து+ உரைத்தல். அதாவது காதலியின் உடைய நலம் பற்றி புனைந்து கற்பனையாக நினைத்து அவளை பற்றி வர்ணித்தல் ஆகும். இக்குறளில் காதலியினுடைய மென்மையை பற்றி விவரிக்கும் பொழுது அனிச்சம் மலருடன் ஒப்பிடுகிறார்.
இந்தப் பூக்கள் மிகவும் மென்மையான இதழ்களை உடையன. முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது 
.[2] இதன் பூக்ககள் மென் செம்மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் காணப்படும். இது சூரியன் உதித்ததும் அதன் பூக்கள் மலரத் தொடங்கும்.[
3]அனிச்சம் சங்கநூல்கள் 
குறிப்பிடும் மலர்களில் ஒன்று

1.நன்னீரை வாழி :- மலர்களில் மிகவும் மென்மையான இதழ்களைக் கொண்டது . அது  நிலப்பரப்பில்  வளரக்கூடிய தாவரம் ஆகும். நன்-நனி என்றால் பெருமை எனப் பொருள்படும். அதாவது மலர்களில் ராணி என சொல்லக்கூடிய தன்மை உடையது ஆண்டிற்கு ஒரு முறைதான் பூப்பூக்கும் எனப் பெருமை வாய்ந்தது.

2.அனிச்சமே :- அத்தகைய பூ அனிச்சமலர் ஆகும்.  எங்கும் சாதாரண பூக்களைப் போல அனிச்ச மலரை காண இயலாது. அத்தகைய மலரை காண்பதே அரிது அதுபோல தனது காதலியானவள் மற்ற பெண்களை விட மிகவும் தனித்தன்மை மிக்கவர் என ஒப்பிட்டுச் சொல்கிறார்.

(மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்றார். (குறள் எண்.90)

அதுபோல அனிச்சமலர் ஆனது மிகவும் மென்மையானது அதை முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும். அத்தகைய மலரை போன்றவள் எனது காதலி.

3‌.நின்னினும் மென்னீரள் :- ஏ அனிச்ச பூவே நீ தான் மிகவும்  மென்மையான பூவாக இருந்தாலும் நின்னினும் அதாவது உன்னை விட எனது காதலியே மிகவும் மென்மையானவளாவாள். எனவே பூவே நீ உன் மீது கர்வம் கொள்ளாதே.

4.யாம்வீழ் பவள்.;- என்னிடம் காதலில் வீழ்ந்த காதலி அனிச்ச மலரை விட மிகவும் மென்மையானவள். காரணம் தலைவனது பார்வையிலும்  குரலிலும் மென்மை இல்லை என்றால்
உடனே அவள் வாடி விடுவாள். அதனால் காதலியின் மனம் கோபப்படாயல் எப்பொழுதும் நடந்து கொள்ள வேண்டும்.

உட்கருத்து:- *பெண் (மென்)மையின் இலக்கணம் அவளது தேகம்*

.
மேலும்