அந்தவீட்டுக்குள்ள பெரிய கலாட்டாவே நடந்துக்கிட்டு இருந்துச்சு. அவளோட அய்யாவை அவளோட அத்தைமகனும் மகளும் கோவமா திட்டிப்பேசிக்கிட்டு இருந்தாக.
டேய் கிழவா என்ன என்ன கேனச்சிறுக்கின்னு நெனச்சியியா வீட்ட என் பேருக்கு எழுதிவைக்கிறேன்னு தான சொல்லி கலியாணம் பண்ணி வைச்ச. காரியம் முடிஞ்சப்புறம் காலவாறலாமுன்னு பாக்குறீயா.... அடிச்சே கொண்டுருவேன் ஒழுங்கா வீட்ட எழுதிவைன்னு அந்தப்பொண்ணு கத்திக்கிட்டு இருந்தா
கூடவந்த அவளோட அண்ணன் அய்யாவை கழுத்தப்பிடிச்சி மிரட்டிக்கிட்டு இருந்தான்
அவரு எதுவுமே பேசாம திமிறிக்கிட்டு இருந்தாரு அவரால பேசமுடியல. ரொம்பக்கஸ்ட்டப்பட்டு அவனைத்தள்ளிவிட்டுட்டு இருமுனாரு...
அவரால பேசமுடியல. திக்கித்தெனறிப்பேசுனாரு ஆமா அப்ப சொன்னேன். அப்ப நெலவரம் வேற இப்ப எல்லாம் மாறிப்போச்சு. அது என்னோட சுயசம்பாத்தியத்துல கட்டுன வீடு அதை யாருக்குக்குடுக்கனும்ன்னு எனக்குத்தெரியும் உன் சோலியப்பாத்துக்கிட்டு போடா உன்னமாதிரி சொந்த தாத்தாவையே அடிச்சி மிரட்டுறவங்களுக்கு வீட்டக்குடுத்தா அது மகா பாதகம் குடுக்க முடியாது என்னவேண்ணாலும் பன்னிக்கபோடான்னு சொன்னாரு
அவன் திரும்ப அவரை பிடிச்சி இழுத்து கழுத்துலகையவைச்சான். அந்தப்பொண்ணு கத்துச்சு. டேய் கிழவா ஒழுங்கா குடுத்துரு இல்ல அடிச்சே சாவடிச்சிடுவோம் சொல்றது ஒண்ணு செய்யிறது ஒண்ணு ....நீ வீடு குடுக்குறீன்னு சொன்னன்றதுனால தான கலியாணத்துக்கே ஒத்துக்கிட்டேன்.... கலியாணம் முடிஞ்சவன்ன ஏமாந்துட்டுப்போறதுக்கு நான் இளிச்சவாசிறுக்கியா என்ன..... அவரை நல்லா சாத்துடான்னு கத்துனா
இதுக்கு நடுவில அவரு திமிறுனாரு. அவனவரோட சங்கப்பிடிச்சி அழுத்துனான் அவரோட கண்ணுல தண்ணி ஊத்துச்சி முழிபிதுங்குச்சு. அவனை அவர் தள்ளிவிட முயற்ச்சி பன்னும் போது அவன் பின்னாடி அவரைத்தள்ளுனான். அவர் மண்டை சுவத்துல போய் வேகமா மோதுச்சு. அவர் சரிஞ்சிவிழுந்தார் சுவத்துல ரத்தம் கோடா இறங்குச்சு.....
அந்தப்பொண்ணு என்னா ஆச்சுன்னு பாரு செத்துக்கித்துபோய்டப்போறான் அப்புறம் நாமதான் போலீஸ் ஜெயில்ன்னு அலையனும்ன்னா.
அவன் அவர் மூக்குல கையவைச்சிப்பாத்தான். மூச்சு பேச்சு இல்ல. அவனுக்கு கைகால் ஒதற ஆரபிச்சது. செத்துட்டாரு போல.... இப்ப என்னா பன்னுறதுன்னு தெரியலயேன்னா தலையில கையவைச்சி ஒக்காந்தான்.
அவ செத்தானா அவன் ஹா ஹா ந்னு சிரிச்சாஅவனும் சேந்து சிரிச்சான்...
.அய்யோ அய்யான்னு கத்திக்கிட்டே திடுக்கிட்டு எழுந்தா அவ ... என்ன மோசமான கனவுன்னு நெனச்சிக்கிட்டு எந்திரிச்சா. ஒடம்பெல்லாம் வேர்த்துப்போச்சு
எந்திரிச்சி தண்ணியக்குடிச்சிப்புட்டு உள்ளாற அய்யா ரூமுல போய் பாத்தா. அவர் அசந்து தூங்கிட்டு இருந்தாரு. நிம்மதிப்பெருமூச்சு விட்டா
காலையில அவளோட அத்த மகளும் மகனும் வறேன்னு சொல்லிருந்தாக. சொத்துபத்திப்பெச.
அவளோட அய்யா மகபிள்ளை பேத்திக்கி கலியாணம் நிச்சயம் பண்ணுறப்போ வீட்டை மகளுக்கும் நெலத்தை மகனுக்கும் எழுதித்தாறதா சொல்லிருந்தாரு . அந்தப்பொண்னுக்கு கலியாணம் முடிஞ்சி ஒருவருசம் ஆயிடுச்சு. ஆனா அதுக்குள்ள அவரோட மகனும் மருமகளும் ஆக்ஸிடெண்டுல போய்சேந்துட்டாங்க. அவங்க மக தனியாகிட்டா இப்ப அய்யாகிட்டத்தான் இருந்தா. அவளை கரைசேக்கவேண்டிய பொறுப்பு அய்யாவுக்கு வந்துருச்சு. இதுக்கு நடுவில நெலம் வெவசாய்ம் தண்ணி இல்லாம நின்னுபோச்சு. கைல காசுமில்ல அதுனால மக்ளுக்கு வீட்ட எழுதிக்குடுக்க தள்ளிப்போட்டாரு
அதக்கேக்கத்தான் அவங்க காலையில வாறதாசொல்லியிருந்தாக.
காலையில அவுகளும் வந்துட்டாக. அய்யகிட்ட என்ன செய்யிறதா உத்தேசம்ன்னு கோவமாக்கேட்டாங்க.
அய்யாசொன்னாரு. கொஞ்சம் பொறுங்க இந்தப்பொண்ணு கலியாணம் முடியட்டும் அப்புறமா எழுதித்தாறேன்னுசொன்னாரு
அதுக்கு அந்தப்பொண்ணு என்ன என்ன கேண்ச்சிறுக்கின்னு நெனச்சியா ஒழுங்கா எழுதி இப்பவே குடுன்னு கத்துனா
அப்ப அய்யா சொன்னாரு குடுக்குறேன் வாக்கு மாறமாட்டேன் ஆனா கொஞ்சம் பொறு... இவளோட அம்மா அப்பா இருந்துருந்தா ஒடனே குடுத்துருப்பேன். அவங்க அகலாமா போய்ட்டதால அவளைக்கரை சேக்கணும் அதுவரைப்பொறுங்கன்னாரு
ஆனா அவங்க கோவத்துல கத்துனாங்க
அப்ப இவ சொன்னா அய்யா. வீட்டை எழுதிக்கொடுத்துருங்க.ன்னா.
என்னம்மா சொல்ற ந்னாரு அய்யா
ஆமாய்யா. சொத்து வீடு வரும் போகும் ஆனா எனக்குன்னு இருக்குறது இப்ப நீங்க மட்டும்தான் நீங்க எனக்கு வேணும். எனக்குகலியாணமே ஆகாட்டினாலும் பரவாயில்ல. நீங்க உசுறோட இருக்கணும்....இல்லாட்டி நான் அனாதையாயிடுவேன்னு அழுதுக்கிட்டே சொன்னா.
யாருக்கும் ஒண்ணும் புரியல. வந்தவங்களுக்கும் ஒருமாதிரியாகிபோச்சு. அவங்களே என்னம்மா சொல்ற ஒண்ணும் புரியலயேன்னாக
இவ அழுதுக்கிட்டே ராத்திரி கண்ட கனவைசொன்னா. சொல்லிட்டு அப்புடி எதுவும் அய்யாவைப்பன்னிடாதீங்க நான் அனாதையாகிடுவேன்னு அழுதுகிட்டே சொன்னா...
வந்த அத்தமகளுக்கும் கண்ணு கலங்கிடுச்சு. சொத்து கேக்க வந்தம்தான். ஆனா தாத்தாவைக் கொல்லுற அளவுக்கு மிருகங்கள் இல்ல நாங்க அப்புடி ஒரு செயலச்செய்வோம்ன்னு உனக்குத்தோணிருச்சுபாரு அதை கேக்கவே நெஞ்சு நடுங்குது ந்னு கண்ணுல தண்ணி வர அழுதுட்டா அவ.
சொந்தத்தாத்தாவ அப்புடி யாராவது செய்வாங்களா. அவரு மடில வளந்தவங்க நாங்க. அவரு எப்ப வேணுமானாலும் கொடுக்கட்டும் இல்ல கொடுக்காமக்கூடப்போகட்டும். உறவுகள் முக்கியம் நீயும் பாவம் உன் வாழ்க்கையும் முக்கியம் ஒரு பொண்ணோட கஸ்ட்டத்தை ஒரு பொண்ணே ஒணறலைன்னா அவ பொண்ணே கெடையாது.....சொல்லி அவளை அணைச்சிக்கண்ணீர் விட்டா.
அய்யாவும் கண் கலங்கிட்டாரு. ஆயிரம் இருந்தாலும் சொந்தம் விட்டுப்போகுமா...ன்னு சொல்லிட்டு கண்ணத்தொடச்சிக்கிட்டாரு
ஆனா அவளோட அழுக நிக்கவே இல்ல அய்யாஎப்பவும் என்கூட இருக்கனும் சொல்லி அவரை கட்டிப்புடிச்சிக்கிட்டு கண்ணீர் விட்டா அய்யா சொன்னாரு ஒனக்கு நல்லது நடக்குறவரை இந்த உசிறபுடிச்சிவைச்சிருப்பேன்ன்னு சொல்லும்போது அவர் கண்ணுல தண்ணி ஊத்துச்சு அது அவளோட தலைய நனைச்சிச்சி.
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்