சட்டைமுனி சித்தரின் ரகசியம்!

By சரவணன்

பாம்பு பிடிப்பதை தனது குலத்தொழிலாக கொன்ட பாம்பாட்டி சித்தர். சித்தராக ஆவதற்கு முன் பாம்புகளை பிடித்து பிழைப்பு நடத்தி வந்தார். அப்படியொரு நாள் அவரும், இன்னொருவரும் பாம்புகளை பிடிக்க காட்டுக்குள் சென்றபோது அங்கே காட்டுக்குள் சட்டைமுனி தியானத்தில் இருந்தார். 

இவர்கள் இருவரின் சத்தம் கேட்டு விழித்த சட்டைமுனி அவர்களை யார் என்று கேட்கிறார். அவர்களும் தாங்கள் பாம்புகளை பிடித்து பிழைப்பு நடத்துவதை சொல்கிறார்கள். கோபம் கொன்ட சட்டைமுனி, இதெல்லாம் ஒரு பிழைப்பா? என்று ஏளனமாக கேட்கிறார். அப்போது
பாம்பாட்டியார் :- என்னா அப்புடி கேட்டுப்புட்டீங்க. பாம்பை கண்டா படையே நடுங்கும். அப்பேற்ப்பட்ட பாம்பை வீரமா நின்னு நாங்க உசுர பணயம் வச்சி புடிக்கிறோம். எங்க வீரத்தை பாராட்டாம கேலி பேசுறீங்களே..?

சட்டைமுனி :- ஓஹோ,, பாம்பு பிடிப்பது அவ்வளவு பெரிய வீரச்செயலோ என்று கூறிவிட்டு தனது சித்தியால் அடுத்த நொடியே அந்த இடத்திற்கு இரண்டு பாம்புகளை வரவழைத்து தனது இரண்டு கைகளால் அவற்றை பிடித்து தூக்கி காட்டிவிட்டு திரும்ப விட்டுவிட்டு, பாம்பாட்டியாரை நோக்கி சொன்ன இந்த வார்த்தைதான் அவரை சித்தத்தின்பால் ஈர்த்து,, அதுயென்ன என்று அறியும் ஆவலை தூண்டியது?, 

முட்டாள்களே,, இந்த மண்ணிலே பிறந்து மனிதர்களுக்கு பயந்து வாழும் இந்த பாம்புகளை பிடிப்பவன் வீரனில்லை. தனது மலக்குடலுக்கு மேலே சுருண்டு படுத்துக்கிடக்கும் பாம்பை தன் உள்ளுக்குள் சென்று அதை தட்டியெழுப்பி, சீறியெழும் அந்த பாம்பை பிடித்து தன் இஷ்டப்படி எவனொருவன் ஆட்டிவைக்கின்றானோ அவனே உண்மையான வீரன் என்றார்.

இந்த சம்பவம்தான் பாம்பாட்டி சித்தரை சட்டைமுனி சித்தருக்கு சீடராக தூண்டியது.
திருச்சிற்றம்பலம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE