உள்ளம் கவர் கள்வனே!

By சரவணன்

நான் சற்றும் உன்னை
எதிர்பாராத அந்த நேரத்தில்
என்னடா இப்படி
செய்துவிட்டாய்என்னை
நிலை குலந்து 
உடல் வியர்த்து
தொண்டை உலர்ந்து
போகும்படி ஆக்கிவிட்டாய்
கைதேர்ந்த திருடன்நீ
ஒருவருக்கும் தெரியாமல்
கூட்டத்தில் கை பிடித்து
அழுத்துகிறாய்
ஒன்றுமேஅறியாத 
முகபாவனையுடன்
என்னை அந்தகணம்
நிலை குலையவைத்துவிட்டாய்
பின் வழிப்போக்கன்போல
என்ன ஆனது என்று
விசாரணைவேறு
கொன்றிருப்பேன் உன்னைஅப்போது
ஆனால் இப்போதுஅந்த கை யை 
பார்த்துபார்த்து மகிழ்கிறேன்
மீண்டும் அந்தவழியில்
பயணம் செய்து பார்க்கிறேன்
திரும்ப நீ என்
கைபிடிக்க மாட்டாயாஎன்று
பாடா படுத்துகிறாயடா
கள்வனே

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE