யாதகிரிகுட்டா ஸ்ரீ நரசிம்மர் தரிசனம் - ஹைதராபாத்

By Tejas

இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயம் இருக்கிறது.இந்த ஆலயம் மற்ற நரசிம்மர் ஆலயங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது.

அதாவது பொதுவாக நரசிம்மர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நரசிம்மர் யோக நரசிம்மர் ஆகவோ,உக்கிர நரசிம்மர் ஆகவோ,லட்சுமி நரசிம்மராகவோ எப்படி இருந்தாலும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார்.

யோக நரசிம்மராக இருக்கும் போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையிலும் மற்ற நரசிம்மராக இருக்கையில் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்ட நிலையிலும் காணப்படுவார்.

லட்சுமி நரசிம்மராக இருக்கும் பட்சத்தில் தன்னுடைய மடியில் லட்சுமி தேவியை அமர வைத்து காட்சி தருவார்.

ஆனால் யாதகிரிகுட்டாவில் அருள் பாலிக்கும் லட்சுமி நரசிம்ம பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

ஸ்ரீ லட்சுமி தேவியானவர் நரசிம்மரின் இடது பக்கத்தில் அருகிலேயே நின்ற கோலத்தில் இருக்கிறார்.

பாடல்
நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து….
பரமன் அருள் தரும் சாதனம்…
(நாராயண மந்திரம்)
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
(நாராயண மந்திரம்)

.
மேலும்