வரலட்சுமி விரதம் ஏன்?

By News Room

வளங்களையும், வரங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமியை மனதில் நினைத்து எடுக்கப்படும் வரலட்சுமி விரதம் (அல்லது) வரலட்சுமி நோம்பு எடுப்பதற்கு சிறந்த நேரம் மற்றும் பூஜை முறைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி பெண்கள் மற்றும் திருமணம் ஆன பெண்கள் என, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று இந்த வரலட்சுமி விரதம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வரலட்சுமி விரதம் எடுக்கப்பட உள்ள நிலையில், இதனை எப்படி கடைபிடிப்பது, விரதம் எடுக்க உகர்ந்த நேரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

அம்மனை கொண்டாட கூடிய மாதங்களில் உயர்ந்த மாதம் ஆடி. அப்படி பட்ட ஆடி மாதத்தில் கொண்டாட கூடிய விரதம் வரலட்சுமி நோம்பு. ஆடி மாத அம்மாவாசை முடிந்ததும் வளர்பிறை துவங்கும். இந்த வளர்பிறையில் பவுர்ணமிக்கு முன்னதாக துவங்கும், வெள்ளிக்கிழமையில் வருவது தான் வரலட்சுமி விரதம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் எடுக்கப்பட உள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் பொதுவாக... காலை 9:15 முதல் 10:15 வரையிலும், மாலை 4:45 முதல் 5:45 வரை நல்ல நேரமாக உள்ளது. எனவே இந்த நேரங்களில் வரலட்சுமி விரதம் எடுக்க சிறந்த நேரம் ஆகும். அப்படி இல்லை என்றால், வீட்டில் விளக்கேற்றும், அந்தி சாயும் நேரத்தில் விரதத்தை எடுப்பது சிறந்தது. 

எந்த வீட்டில் வரலட்சுமி விரதம் எடுக்கப்படுகிறதோ, அந்த வீட்டிற்கு மஹாலக்ஷ்மி வருவதாகவும், வாசம் செய்வாள் என்பதும் ஐதீகம்.

மஹாலக்ஷ்மி ஒரு வீட்டில் வாசெய்கிறாள் என்றால், அந்த வீட்டில் உள்ள கஷ்டங்களை போக்கி சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும், அனைத்து விதமான வளங்களையும் அள்ளித்தருவாள் என்கிறது புராணம்.

வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்க, முதல் நாளே... அதாவது வியாழக்கிழமை அன்றே, வீட்டை சுத்தம் செய்து, சுவாமிக்கு தீபாரதணை செய்ய கூடிய பாத்திரங்கள் மற்றும் சுவாமி படங்களை துடைத்து பொட்டு வைத்து தயார் படுத்திக்கொள்ளுங்கள். எந்த ஒரு விரதத்தையும் துவங்கும் முன்பு, விநாயக பெருமானை வணங்க வேண்டும். 

அதன் பின்னர் நன்கு சுத்தம் செய்த தாம்பாளத்தில் கீழ் கோலமிட்டு, அதன் மேல் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கலசத்தை வைக்கவும். அதன் பின்னர், பூஜைக்கு தேவையான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, போன்ற மங்கள பொருட்கள், பழங்கள், இனிப்பு, நெய்வேத்தியமாக தயார் செய்யப்பட்ட கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற அனைத்தையும் தயார் செய்து வைத்து கொளளவும்..

முதலில்,கற்பூரத்தை வெளிப்பகுதியில் காட்டி வாசலில் இருக்கும் மஹாலக்ஷ்மியை வீட்டிற்குள் அழைத்து செல்லுங்கள். பின்னர் கலசத்தின் பக்கத்தில் அமர்ந்து அம்மன் துதியை கூறி பூஜைகள் செய்யுங்கள். மனம் உருகி அழைத்தாள் வராமலா இருப்பாள் மஹாலட்சுமி. வருவது மட்டும் இன்றி நீங்கள் கேட்கும் வரங்களை அள்ளிக்கொடுப்பாள். பிறகு வரலட்சுமியை வேண்டி நோம்பு கயிற்றை கும்பத்தின் மீது சாற்றி வேண்டிக்கொண்டு தீபாராதனை செய்யுங்கள்.

பின்னர் உங்கள் வீட்டில் மூத்த சுமங்கலிகள் இருந்தால் அவர்களுக்கு பிரசாதத்தை கொடுத்து இந்த விரதத்தை முடித்து, நோம்பு கயிற்றை கையில் கட்டி கொள்ளுங்கள். இந்த விரதத்தை திருமணம் ஆனவர்கள் எடுப்பதால் அவர்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னி பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு சிறந்த திருமண வாழ்க்கை அமையும்.

ஓம் மஹாலெட்சுமி நமஹ 

.
மேலும்