ஸ்ரீ ராம நவமி ஏன், எதற்கு, எப்படி?

By nandha

புனர்பூசம் நட்சத்திரம் ஸ்ரீ ராமபிரானை வழிபட வேண்டிய திருநாள்!

 ஸ்ரீ ராம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ சீதா லக்ஷ்மண ஸ்ரீ ஆஞ்சநேயமூர்த்தி சமேத ஸ்ரீ ராமச்சந்திரபிரபு திருவடிகளே சரணம்
‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென் றிரண்டெழுத்தினால்’
ஸ்ரீராமர் அவதாரம் மிகவும் புண்ணியமானது. ராமநாமம் மிகவும் புனிதமானது. இவ்வாறு ஸ்ரீராம நாமத்திற்கு மகிமையும், சக்தியும் இருப்பதால் ஸ்ரீராமாயணத்தை அனுதினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்றிண்டெழுத்தினால்
ஸ்ரீராமர் அவதாரம் மிகவும் புண்ணியமானது. ராமநாமம் மிகவும் புனிதமானது. இவ்வாறு ஸ்ரீராம நாமத்திற்கு மகிமையும், சக்தியும் இருப்பதால் ஸ்ரீராமாயணத்தை அனுதினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

வால்மீகி மகரிஷியால் எழுதப்பட்ட இதிகாச ரத்ன ராமாயணத்தை தினந்தோறும் பாராயணம் செய்வோருக்கு ஆயுள், ஆரோக்கியம், சந்தானம், செல்வம் போன்ற அஷ்ட ஐசுவரியங்களும் தானாகவே சித்திக்கும். ஸ்ரீராம மந்திரத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. "ராம் ராம்'' என்று உச்சரித்தால் அங்கே ராமர் எழுந்தருளி விடுவார்.

ராமாயணம் படிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் அருவமாக எழுந்தருளுவார் என்பது ஐதீகம். இதனால்தான் ராமாயண காலசேட்ப இறுதியில் ஆஞ்சநேய உற்சவம் செய்து பூர்த்தி செய்வது சம்பிரதாயம். ஸ்ரீமந்நாராயணனின் அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் மிகவும் ஒப்பற்ற வைபவங்கள் மிக்கதாகும்.

ராமபிரான் சித்திரை மாதத்தில் அவதரித்தார் என்று கூறப்பட்டாலும், பெரும்பாலும் பங்குனி மாத வளர்பிறை நவமி திதியிலேயே ராமநவமி கொண்டாடபப்டுகிறது. அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும் தங்களை கெட்ட திதிகளாக எல்லாரும் எண்ணுவதாக மகாவிஷ்ணுவிடம் கூறி வருதப்பட்டன.
அவர்கள் மீது கருணைகொண்டு நவமி திதியில் ராமராகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும் அவதரித்து திதி தேவதைகளின் மனக்குறையைப் போக்கினார் மகாவிஷ்ணு. முக்தி தரும் ஏழு தலங்களில் முதன்மையாகச் சொல்லப்படுவது அயோத்தி. சரயூ நதிக்கரையில் அமைந்த மீன் வடிவமுள்ள இந்த நகரில், இஷ்வாகு குலத்தில் 65-வது மன்னனாக அவதரித்தவர் ராமபிரான். தசரதனின் தாத்தாவின் பெயர் ரகு.
இவர் விஸ்வஜித் யாகம் நடத்தி தனது செல்வங்களையெல்லாம் தானமாக வழங்கினார்.

அதனால் ராமரின் வம்சம் ரகு வம்சம் என்றும் போற்றப்படும். ராமநவமியன்று ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா' என்று 108 முறை மனமொன்றிச் சொன்னாலே போதும். எல்லையற்ற புண்ணியம் கிட்டும்.
ராமநவமியில் விரதமிருப்பதால் லட்சுமி கடாட்சம், வியாதிகள் அகலுதல், பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல், பிள்ளைப்பேறு போன்றவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். `ஓம் நமோ நாராயண' என்னும் எட்டெழுத்து மந்திரத்திலுள்ள `ரா'வும் `ம'வும் இணைந்து உருவானதே `ராம' எனும் மந்திரம்.

இது ராமபிரான் பிறப்பதற்கு முன்பே உருவானதாகச் சொல்வார்கள். ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக்கூடியது. `ரா' என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கெல்லாம் வெளியேறி விடுகின்றன என்றும், `ம' என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப் பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப்படுவதாகவும் சொல்வர்.

பாவங்கள் போக்கும் ஸ்ரீராமநவமி…. விஷ்ணு ஆலயங்களில் உற்சாக கொண்டாட்டம்!

ஸ்ரீராமபிரான் அவதார தினமான
ஸ்ரீராமநவமி இந்தியா முழுவதும் உள்ள விஷ்ணு ஆலயங்களில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் கோதண்டராமர், மாதவப் பெருமாள் ஆலயங்களிலும், ஆஞ்சநேயர் ஆலயங்களிலும் ஸ்ரீராமநவமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஸ்ரீராம நாமத்திற்கு இணையான ஒரு வேதம் கிடையாது... மகாவிஷ்ணு மனிதனாக அவதரித்து மானிடர்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தவர்.

அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும்.
ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் வாழ்ந்து காட்டிய ராமர், ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டியவர். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம்.

அஷ்டமி - நவமி

‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.

இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், என்றும் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராம நவமி

இன்று ஸ்ரீராமபிரானின் அவதாரத் திருநாளாகும். ஸ்ரீராம நவமி விழா விஷ்ணு ஆலயங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன்-பத்து எனவும், பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின்-பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்

இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். ஸ்ரீராம நவமியன்று வைணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். பஜனைகள், இராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

நீர்மோர், பானகம்

வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு. ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிக்கலாம்.

கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம்
உருவானது.

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், வனவாசத்தின் போதும் தாகத்திற்கு நீர் மோரும், பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது என்கின்றன புராணங்கள்.

ஸ்ரீராமநவமி விரதம்

ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வதும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது.

காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராமநவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.

ஸ்ரீராம நாமம்

இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ஸ்ரீராமநவமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அன்று ஒருவேளையாவது பட்டினி இருப்பது நல்லது. பகல் முழுக்க உபவாசம் இருப்பவர்கள், வீட்டில் சுத்தமாக தயார் செய்த நீர்மோர் (காரம் சேர்க்காமல்) பருகலாம். மாலையில், உள்ளூர் கோயில் முன்பு ஊர்மக்கள் ஒன்று கூடி, 'ஸ்ரீராம ஜயராம் ஜயஜய ராம்'' என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லியபடியே ஊரைச் சுற்றி வர வேண்டும். கோயிலை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் இதே மந்திரத்தைச் சொல்ல வேண்டும். நீர்மோர், வெள்ளரிக்காய், பானகம் படைத்து ராமபிரான் படத்துக்கோ, சிலைக்கோ பூஜை செய்ய வேண்டும். ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

ராமாயணம் பாராயணம்

ராமநவமிக்கு மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, கம்பராமாயணத்தில் ராம பட்டாபிஷேகத்தை வர்ணிக்கும் பகுதியை பாராயணம் செய்ய வேண்டும். இதை 'புனர்பூஜை' என்பர். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் வால்மீகி ராமாயணத்தில் உள்ள ராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் செய்யலாம்.

நோய் நொடிகள் தீரும்

ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமனை வணங்கி வழிபட்டால் நோய், நொடி விலகும். பாவங்கள் தீரும். வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் நம்மை வந்து சேரும்.
ஸ்ரீராமநவமி: சகல சவுபாக்கியம் தரும் ஸ்ரீராமன்
ஒவ்வொரு யுகத்திலும், பல்வேறு காலகட்டத்தில் பல காரணங்களுக்காகவும், சத்தியம், தர்மத்தை காப்பதற்காகவும் பகவான் விஷ்ணு பல்வேறு அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிறப்பு மிக்கவை தசாவதாரங்கள். இதில் ஏழாவதாக எடுத்தது ராமவதாரம். முக்தி தரும் 7 ஸ்தலங்களில் முதன்மையாக சொல்லப்படுவது அயோத்தி.

சரயு நதிக்கரையில் அமைந்த மீன் வடிவம் உள்ள இந்த நகரில் ரகு குலத்தில் மன்னனாக அவதரித்தவர் ராமபிரான். திதி, நட்சத்திர மாற்றங்களுக்கு ஏற்ப பங்குனி அல்லது சித்திரையில் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. இருப்பினும் பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதி, புனர்பூச நட்சத்திரம் சேரும் நாளே ராம ஜென்ம தினம்.

அஷ்டமி, நவமி திதிகளின் அதிதேவதைகள் மகாவிஷ்ணுவிடம் சென்று, ‘பூலோகத்தில் எங்கள் இருவரையும் (அஷ்டமி, நவமி) எல்லா நல்ல விஷயங்களுக்கும் புறக்கணித்து தவிர்த்து விடுகிறார்கள். எங்களை யாரும் ஒருபொருட்டாகவே மதிப்பதில்லை. எங்களுக்கும் முக்கியத்துவம் ஏற்படுத்தி தரவேண்டும்’ என வேண்டி முறையிட்டனர்.

அவர்களது வேண்டுகோளை ஏற்று அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும், நவமி திதியில் ராமராகவும் அவதரித்தார் மகாவிஷ்ணு. அதுவே கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணாஷ்டமி என்றும் ஸ்ரீராமநவமி என்றும் கொண்டாடப்படுகிறது. கண்ணன் சொன்னதை (கீதை) பின்பற்ற வேண்டும். ராமர் காட்டிய வழியில் நடக்க வேண்டும் என்பார்கள். ராமாயணம் என்ற காவியம் பல்வேறு ரிஷிகள் மூலம் நமக்கு தெரிய வருகிறது. ‘அயனம்’ என்றால் பாதை, வழி என்று பொருள்படும். அதன்படி ராமர் காட்டிய வழிதான் ‘ராம அயனம்’.
மற்ற அவதாரங்களில் இறைவனாகவே விஷ்ணு அவதாரம் எடுக்கிறார். ராமாவதாரத்தில்தான் சாதாரண மனிதனாக அவதரிக்கிறார். மற்ற அவதாரங்களில் செய்ததுபோல தனது தெய்வீக சக்தியை பயன்படுத்தாமல் சராசரி மனிதன் அனுபவிக்கும் அத்தனை சுக துக்கங்களையும் அனுபவித்து காட்டியதுதான் ராமாவதாரத்தின் தனி சிறப்பு. அவதாரத்தின் இறுதியிலேயே தன் அவதார நோக்க மகிமையை அவர் வெளிப்படுத்தி காட்டினார்.

தசரத சக்கரவர்த்திக்கு மகனாக பிறந்த ராமன், ஜனக மன்னனின் மகள் சீதா தேவியை மணந்து ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தார். தந்தையின் சத்தியத்தையும் வாக்கையும் காப்பாற்ற 14 ஆண்டுகள் வனவாசம் செய்தார். சகோதர உறவுகளின் முக்கியத்துவத்தையும், பாசத்தையும், பந்தத்தையும் உணர்த்தினார். எல்லா ஜீவராசிகள், பட்சிகள், வானர சேனைகளை தன் உடன்பிறப்புகளாக ஏற்றார். பெற்ற தாய், தந்தையிடம் எப்படி பக்தி செலுத்த வேண்டும். அரசாட்சி செய்பவர்கள் எப்படி தர்மத்தை காக்க வேண்டும். கணவன் - மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டும்.

பகைவருக்கும் எப்படி அருள வேண்டும் என எல்லா தர்ம, சத்திய, நீதி போதனைகளை நமக்கு அருளியதே ராமாவதாரத்தின் சிறப்பு. இறுதியாக, பெண் பித்து பிடித்து மாற்றான் மனைவியை கவர்ந்து சென்ற ராவணனுக்கு தக்க பாடம் புகட்டி அவனை வதம் செய்தார்.

தாய் மீது பாசம் வைத்த கோசலை ராமனாக, தந்தை மீது பக்தி வைத்த தசரத ராமனாக, வீரம் என்னும் வில்லை ஏந்திய கோதண்டராமனாக, ஏகபத்தினி விரதனாக வாழ்ந்த சீதாராமனாக எல்லாவற்றுக்கும் உதாரண புருஷனாக விளங்கியவன் ஸ்ரீஜெயராமன்.
ராம தரிசனத்தைவிட ‘ராம’ நாமத்துக்கு மகிமை அதிகம் என்பார்கள் ‘நாராயணா’ என்ற சொல்லில் இருக்கும் ‘ரா’ என்ற எழுத்தும், ‘நமசிவாய’ என்ற சொல்லில் இருக்கும் ‘ம’ என்ற எழுத்தும் சேர்ந்தே ‘ராம’ என்று கூறப்படுகிறது. ராம நாமம் சொல்லும் இடங்களில் எல்லாம் அவரது பக்தன் ஆஞ்சநேயன் இருப்பார் என்பது நம்பிக்கை. எனவே ஸ்ரீராமநவமி என்பது ராமருக்கு மட்டுமின்றி ஆஞ்சநேயருக்கும் விசேஷம்.

ராம பாணத்தைவிட ராம நாமம் சக்தி மிகுந்தது என்று நம்பி ராம நாமம் சொன்னவர் ஆஞ்சநேயர். வானர சேனைகள் ‘ராம’ நாமத்தை எழுதியும் ராம நாமம் ஜெபித்தபடியும் போட்ட கற்கள் கடலில் மிதந்தன. ராம நாமம் சொல்லி சக்தி பெற்று ஆஞ்சநேயர் கடலை தாண்டி சென்றார் என்கிறது புராணம்.

ஸ்ரீராமநவமியன்று ராமர் படம், ஆஞ்சநேயர் படத்துக்கு மாலை அணிவித்து ராம நாம ஜெபம் செய்து வழிபட்டு வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் நம்மை தேடி வரும்.

பிரசாதமாக பாயசம், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வடை, பானகம், நீர்மோர் படைத்து எல்லோருக்கும் வழங்கினால் சகல நலங்களும் சேரும் என்பது ஆன்றோர் வாக்கு. அன்றைய தினம் முழுவதும் ‘ஸ்ரீராமஜெயம்‘ எழுதலாம். சீதாராம அஷ்டோத்திரம் சொல்லலாம். ராமாயணம் படிக்கலாம். குறிப்பாக சுந்தர காண்டம் படிப்பது மிகவும் புண்ணியமாகும். கீழ்க்கண்ட பாடல் வரிகளை படிப்பது சிறப்பு.

‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென் றிரண்டெழுத்தினால்’
கிரக தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ ராமர் ஜனன ஜாதகம்
தசரத சக்கரவர்த்தி பக்தியுடன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக பெருமாள் ஸ்ரீகோதண்டராமனாக இந்த பூமியில் அவதரித்தார். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெற்றும், சந்திரன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்கில் இருந்து ஆட்சி, வர்கோத்தமம் பெற்றும், நீதிமான் தர்மவான் சனீஸ்வரர் துலா ராசியில் உச்சம் பெற்றும், சந்திரனுக்கு கேந்திரத்தில் மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றும், அழகு தேஜஸ் சகல சுகபோகங்களுக்கும் கர்த்தாவான சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்றும், 12-ம் இடமான மோட்ச ஸ்தானத்தில் கேதுவும், ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் தனுசு ராசியில் கோதண்ட ராகுவாக இருப்பதும் ஜோதிட அம்சங்களின்படி மிகமிக புண்ணியம் மிக்க அமைப்பாகும். இந்த ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் கிரக தோஷ பீடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ராமநவமி என்றால் என்ன?

அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும், தங்களை எல்லோரும் கெட்டவர்களாகவே பார்க்கின்றனர். என்று மகா விஷ்ணுவிடம் வருத்தப்பட்டு கூறினர். அவர்களது வருத்தம்போக்க விஷ்ணு பகவான் அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும், நவமி திதியில் ராமராகவும் அவதரித்தார். அந்த ராமர் அவதரித்த நாள் தான் ராமநவமி.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு பலன் தரும் பட்டாபிஷேக வழிபாடு
புனர்பூச நட்சத்திரக்காரர்கள் பட்டாபிஷேக ராமர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் இவர்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு பலன் தரும் பட்டாபிஷேக வழிபாடு

ராமர் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம். நட்சத்திரங்களின் வரிசையில் இது ஏழாவது இடத்தைப் பெறுகிறது. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதம் மிதுனத்திலும், நான்காம் பாதம் கடகத்திலும் இடம்பெறும். இது தேவ கணத்தைச் சார்ந்த சிறப்பான நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ராமபிரான் காடுகளில் அலைந்து திரிந்து சீதையைத் தேடியதால் இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு ‘காடாறு மாதம், நாடாறு மாதம்’ என்ற நிலை உருவாகும் என்று கிராமப்புறங்களில் சொல்வர். அதாவது வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீரெனத் தொழிலுக்குச் சென்று விடுவர்.
இருந்தாலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். மக்கள் சக்தி இவர்களிடம் அதிகம் உண்டு. உதவி செய்யும் குணம் இவர்களுக்கு உடன்பிறப்பாக இருக்கும். ரோஷம் இவர்களுக்கு அதிகம் வரும் என்பதால் சில சமயங்களில் பின் விளைவுகளைச் சிந்திக்காமல் பேசிவிடுவார்கள். பட்டாபிஷேக ராமர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் இவர்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும். அல்லது அந்த படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்தும் வழிபாடு செய்யலாம்.

ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்

.
மேலும்