சங்கடஹர சதுர்த்தியின் சிறப்புகள்!

By Tejas

முருகப்பெருமானுக்கு சஷ்டி வருவது போல, விநாயகப் பெருமானுக்கு ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியும் விசேஷமாகும். இதற்கு சங்கடஹர சதுர்த்தி என்று பெயர்.

சாந்நித்தியம் நிறைந்தநாள் என்கிறது சாஸ்திரம். பிரதோஷ பூஜை மாலை 4.30 முதல் 6 மணி வரை நடக்கும். அதே போல, சங்கடஹர சதுர்த்தியும்  மாலை வேளையில் 4.30 முதல் 6 மணி வரை நடத்தப்படும்.

சங்கடஹர சதுர்த்தியில், ஆனைமுகத்தானை காலையும் மாலையும் பூஜை செய்ய வேண்டும். காலையில் விளக்கேற்றி, விநாயக அகவல் பாடி  துதிக்க வேண்டும். விநாயகரின் திருநாமங்களைச் சொல்லி  பாராயணம் செய்ய வேண்டும்.

மாலை வேளையில் விளக்கேற்றி விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும்.  அருகம்புல்லுக்கு தீயதையெல்லாம் அழிக்கும் சக்தி உண்டு என்பதால்  கைப்பிடி அளவு அருகம்புல் எடுத்து ஆனைமுகனுக்கு அணிவித்தால் போதும் விநாயகரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

அருகம்புல் எப்படியோ, அதேபோல, வெள்ளெருக்கம்பூவும் அதிக பலன்களை தரும். வீட்டில் உள்ள  தோஷங்களை போக்கும்.

வைகாசி  செவ்வாய் கிழமையில், சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், மாலை வேளையில், அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கம்பூ மாலையும் அணிவித்தல் சிறப்பு. 

.
மேலும்