குடும்பத்தில் அமைதி நிலவி வளம் பெற ஜல தீபம் ஏற்றுங்கள்!

By saravanan

ஜல தீபம் என்பது தண்ணரை கொண்டு ஏற்றக் கூடிய தீபம் ஆகும். நீரினால் நெருப்பை கொண்டு விளக்கேற்றி வைப்பதால் பஞ்ச பூதங்களின் ஆற்றலும் இந்த தீபத்திற்கு இருக்கும். ஜல தீபம் குபேரனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். எனவே இது குபேர ஜல தீபம் என்றும்,  இல்லத்தில் செல்வம் தங்கும். எதிர்மறை சக்திகள் அண்டாது.

ஜல தீபத்தை எப்படி ஏற்றுவது..?

ஒரு  தட்டை எடுத்து மலர்களால் அலங்கரித்து கொண்டு அதன் மேல் கண்ணாடியால் ஆன சிறிய பவுல் அல்லது மட்பாண்டத்தாலான சிறிய பானையை வைத்து ஜலம் இரண்டு பங்கு ஊற்றி கொண்டு அதன் மேல் நல்லெண்ணை  ஊற்றவும்.

எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும். அதன் மேல் பஞ்சு திரி இரண்டை ஒன்றாக திரித்து எண்ணெயில் தோய்த்து வைத்து திரி மூழ்காமல் இருக்க வெற்றிலை வைக்கலாம்.

இந்த தீபத்தை வியாழக் கிழமை மாலையில் ஏற்றுவது நல்லது. குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழன். எனவே வியாழன் மாலை ஏற்றி விட்டு அதனை வெள்ளி, சனி வரை அணையாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும்படி பார்த்து கொள்ளவும். அந்த ஜோதியின் நிழல் இல்லத்தில் இருக்கும் எல்லா கெட்ட சக்திகளையும் ஒழித்து விடும். அனைத்து தேவதைகளின் அருளும் கிட்டும். நீரின்றி எதுவும் இல்லை.

உங்களால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து செய்வதால் எண்ணற்ற பலன்கள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். அந்த தீப ஜோதியை பார்ப்பதால் மனதில்  சாந்தம் குடிகொள்ளும். மனம் ஒருநிலைபடும். மன இறுக்கம் தளர்ந்துவிடுவதை நீங்களே உணர்வீர்கள்.

குடும்பத்தில் எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுபீட்க்ஷம் உண்டாகும். லக்ஷ்மி குபேர பூஜை நீங்கள் செய்வதானால் பூஜையில் சிறப்பம்சமாக இந்த விளக்கை ஏற்றி வைக்கலாம்.

குடும்பம் நோய் நொடி இன்றி நலமுடன் இருக்க வேண்டும். மனித உயிர் ஒவ்வொன்றும் இறையருள் பெற்று சகல வளமும் பெற வேண்டும் என்று  விளக்கேற்றுங்கள். வளம் பெற வாழ்த்துக்கள்!

.
மேலும்