திருவண்ணாமலை சித்ரகுப்தன் திருக்கோயில்

By News Room

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சித்ரகுப்தன் தனிச் சந்நிதி தனிச் சந்நிதியில் அருள் புரியும்   சித்ரகுப்தன்.சுவாமியை தரிசிக்க இன்று  சித்ராபௌர்ணமி அன்று    தரிசிக்க புண்ணியம் அதிகம் 
இந்த படம் உதவி திரு மணிகண்டன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றிகள் கூறி பதிவு செய்துள்ளேன் 
சித்ரகுப்தருக்கு தனிக் கோயில்!
சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தன் எனப் படும் சித்ரபுத்திரன் போற்றப்படுகிறார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் இவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது. இங்கு சித்ரா பௌர்ணமியன்று இவருக்கும் இவர் மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக- ஆராதனைகளுடன் திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

சித்ரகுப்தருக்கு தனிக் கோயில்!
தேனி மாவட்டம், தேனி- போடிநாயக்கனூர் சாலையில் தேனியிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் ‘தீர்த்தத் தொட்டி’ எனும் இடத்திலும் சித்ரகுப்தனுக்கு ஒரு கோயில் உள்ளது. இதன் முன் மண்டபத்தில் விநாயகப் பெருமான் அருள் புரிகிறார். வலப் புறம் உள்ள கருவறையில் சித்ரகுப்தனும் இடப் புறக் கருவறையில் சீலக்காரியம்மனும் அருள் புரிகின்றனர். இந்த இரு கருவறைகளுக்கும் தனித் தனி விமானங்கள் உள்ளன. இங்கு அருள் பாலிக்கும் சித்ரகுப்தன், ஒரு பீடத்தில் அமர்ந்த நிலையில், இடக் காலை மடக்கியும், வலக் காலைத் தொங்க விட்டும், இரு கரங்களில் வலக் கரம் அபய முத்திரையுடனும், ஏடு- எழுத்தாணியுடன் திகழும் இடக் கரத்தை இடது முழங்காலில் வைத்தவாறும் காட்சி தருகிறார். தலைப்பாகை, கழுத்தில் முத்துமாலை அணிந்து அருள் பார்வையுடன் தரிசனம் தருகிறார் இவர். இந்தக் கோயிலின் முன்புறம் உள்ள மண்டபத்தில் நவக்கிரகங்கள் தனித் தனியாக ஓவிய வடிவங்களில் காட்சியளிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இங்கு சித்ர புத்திர விழா சிறப்பாக நடைபெறுகிறது. அன்று எருமைப் பாலால் அபிஷேகம் செய்து, எருமைப் பால் மற்றும் பயத்தம் பருப்பு கலந்த பாயசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இந்த சித்ரபுத்திரரை சித்ரா பௌர்ணமி மற்றும் பௌர்ணமி திதிகளில் வழிபட்டால் பாவங்கள் அழிந்து, வாழ்வு வளம் பெறும் என்பது நம்பிக்கை!
சிதம்பரம் நடராஜர் கோயில், கும்பகோணம்- மயிலாடுதுறை பாதையில் உள்ள திருவாலங்காடு திருத்தலம், திருவிடைமருதூருக்கு அருகில் உள்ள திருக் கோடிக்கா ஆகிய திருத் தலங்களிலும் சித்ர குப்தரை தரிசிக்கலாம்.

சித்ரகுப்தருக்கு தனிக் கோயில்!
திருவண்ணா மலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சித்ரகுப்தன் தன் உதவியாளர் விசித்ர குப்தனுடன் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். தனிச் சந்நிதியில் அருள் புரியும் இவரை, பக்கவாட்டில் உள்ள சிறிய சாளரத்தின் வழியாக தரிசிக்க வேண்டும் என்பர்.

.
மேலும்