திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் உலகப் புகழ் பெற்ற சித்திரை பிரம்மோற்சவம் எனும் சப்தஸ்தானப் பெருவிழாவை முன்னிட்டு ஒன்பதாம் திருநாளான நேற்று காலை (22/04/24) சுவாமி அம்பாள் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தத்தமது #திருத்தேர்களில் (ஐந்து திருத்தேர்கள்) எழுந்தருளி இராஜ வீதிகளில் வலம் வந்து இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நிலையை வந்தடைந்தது பெரிய தேர்!!!
இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் எழுந்தருளி சுவாமி அம்பாள் ஆட்கொண்டார் தென்கயிலாயம் வடகயிலாயம் தரிசனம் செய்து திருத்தேரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பரை பட்டு சார்த்தி தரிசனம் செய்தார்கள்!!!
பின்னர் சுவாமி அம்பாள் திருக்கோயில் திரும்புதல், சண்டால பிராயச்சித்தாபிஷேகம், ஆறூர் சுவாமிகள் தத்தமது ஊர்களுக்கு திரும்பினர்!!!