உறையூரில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

By சரவணன்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆதிபிரம்மோற்சவம் என்றழைக்கப்படும் பங்குனித் தேர் திருவிழாவின் 6ம் நாளான இன்று (22.04.2024) அதிகாலை, நம்பெருமாள், தங்க பல்லாக்கில் புறப்பட்டு, உறையூர் சென்றார்.

வழிநெடுகிலும் பக்தர்கள், தங்கள் ஊர் மாப்பிளையான நம்பெருமாளுக்கு உற்சாகம் பொங்க வரவேற்றனர். அங்கு நாச்சியார் கோயிலில் இன்று மதியம் முதல் கமலவள்ளி தாயாருடன் சேர்த்தி சேவை கண்டருள்கிறார். இதனால் உறையூர் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE