பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி

By தேஜஸ்

கடன் தொல்லைகள் நீங்கும்
சக்தியின் மைந்தனாய்ச்
   சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன
     மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே  
    கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே!             
   தோன்றிடுக என் முன்னே

பொருள் விளக்கம்: : அகிலத்தை ஆட்சி செய்யும் ஆதிபராசக்தியின் முதல் மகனாக அவதரித்து, தம்மை வணங்கும் அடியவர்களது வாழ்வில் பல வெற்றிகளை வழங்கும் பிள்ளையாரே, மனித வாழ்வில் இறை சக்தியால் விளையும் பயன்களையும் தெய்வ ரகசியங்களையும் எடுத்துரைத்த மூத்தப் பிள்ளையே, அட்ட மங்க லங்களில் ஒன்றான யானையின் முகத்தைக் கொண்டிருக்கும் யோக வடிவினரே...

பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாவாக விளங்கும் நீங்கள், வாழ்வில் நாங்கள் பட்ட கடன்கள் அனைத்தும் தீர்ந்திட அருள்செய்யும் சக்தி படைத்தவர் என்பதை அறிவோம்.
உலகம் போற்றும் வண்ணம் பெரும்புகழ் கொண்டவரே, தோரண கணபதியே... தாங்கள், ஒருமுறை எங்கள் முன் தோன்றி அருள்பாலிக்க வேண்டும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE