ஐயப்பனின் மூன்றாவது யாத்திரை ஏன்?

By செய்திப்பிரிவு

சில கோவில்களுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அடுத்தமுறை வரும்போது, கோவிலில் மணி கட்டுவதாக வேண்டிக் கொள்வது உண்டு.

 

இந்த நம்பிக்கை சபரிமலையை பொறுத்தவரை மிகவும் பிரபலமானது. மூன்றாவது யாத்திரை மிக புனிதமாக கருதப்படுவதற்கு காரணம், அப்போதுதான் ஒரு மனிதன் முழுநிலையை அடைகிறான்.

 

தெய்வத்தின் கருணை இருந்தால் மட்டுமே ஒரு மனிதனால் தன்னுடைய மூன்றாவது யாத்திரையை பூர்த்தி செய்ய முடியும். இதை சந்திரனின் மூன்றாம் பிறையை காண்பதற்கு ஒப்பாக சொல்லலாம். அமாவாசை முடிந்து சந்திரன் மெதுவாக வளர்கிறது.

 

இரண்டாம் நாள் சந்திரன் கண்ணுக்கு தெரியாது, ஆனால் மூன்றாம் நாள் நமது கண்ணுக்கு புலப்படும். இந்த மூன்றாம் பிறையை காண்பதில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது.

 

சூரியன் மறைந்த பின் மேற்கு வானத்தில் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால், ஒரு குறுகிய நேரம் மட்டுமே இதை காண முடியும். நமது மனதை ஆளும் கடவுள் சந்திரன் வளர்ந்து, தேய்வதை போல நமது மனமும் மேலும், கீழும் ஊசலாடி கொண்டிருக்கும்.

 

மூன்றாம் பிறை அன்று சந்திர தரிசனம் செய்வது, பகவானை பொன்னம்பல மேட்டில் ஜோதி ஸ்வரூபத்தில் காண்பதற்கு இணையாகும். எனவே, மூன்றாவது யாத்திரை முக்கியமானது.

 

பகவானின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே, ஒருவரால் சபரிமலைக்கு மூன்றாவது முறை செல்ல முடியும். அதேபோல் மூன்றாவது முறையாக சபரிமலைக்கு செல்பவர்களை மணிகண்டன், கொச்சு சாமி என்று அழைப்பார்கள். இது அந்தந்த குழுவினரை சார்ந்ததே தவிர, கட்டாயம் கிடையாது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE