ராகு-கேது பெயர்ச்சி - திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆராதனை

By

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் தேவார பாடல் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்தில் மட்டுமே ராகு-கேது சேர்ந்து இருக்கின்றனர். ஆகவே, நாள் தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. 

இந்நிலையில், வரும் 21ம் தேதி மதியம் 3.13 மணி அளவில் ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி இடம்பெயர்கின்றனர். இந்தப் பெயர்ச்சியையொட்டி, இத்தலத்தில் ராகு-கேதுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன. 

இந்தப் பெயர்ச்சியையொட்டி, மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

ஆகவே, இந்த விழாவிற்கு உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான வெளிமாநிலம், வெளிமாவட்டம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆகவே, பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

திருப்பாம்புரம் என்னும் இந்த ஒரே தலத்தில் "ராகு - கேது" பரிகாரங்களைச் செய்து பலனடையலாம்... திருப்பாம்புரம் வாருங்கள்.. திருப்பங்கள் அரங்கேறும்.. விருப்பங்கள் நிறைவேறும்..!!! தொடர்புக்கு-8754756418.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE